சனி, 10 ஆகஸ்ட், 2013

பாக் பாடகி : இந்திய ராணுவத்தினரின் மரணத்தால் இதயம் நொறுங்கிவிட்டது

டெல்லி பாகிஸ்தான் வீரர்கள் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 5
இந்திய வீரர்கள் பலியானது பெரும் வருத்தம் தருகிறது. இந்த செயலுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலமான சுஃபி பாடகி சனம் மார்வி. டெல்லியில் இசைக்கச்சேரியில் பங்கேற்க வந்திருந்தார் சனம். ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலால் ஏற்பட்ட சூழலால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். இந்தநிலையில், தனது நாட்டு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு சனம் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது.. இந்த தாக்குதலில் தங்களது பிள்ளைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களின் வேதனையில் நானும் பங்கேற்கிறேன். ஒரு தாயாக அவர்களது வலியில் நானும் பங்கேற்கிறேன். என்னுடைய இதயம் வலிக்கிறது. இப்படிப்பட்ட சோகமான சூழலில் என்னால் பாட முடியாத நிலை

 5 வீரர்களின் உயிரிழப்பு மிகப் பெரிய சோகம். நான் ஒரு தாய். ஒரு தாய்க்குத்தான் இன்னொரு தாயின் வலி, சோகம் புரியும். என் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால் எப்படித் துடிப்பேனோ, அப்படித்தான் அந்த ஐந்து வீரர்களின் தாயார்களின் உணர்வுகளையும் நான்புரிந்து கொண்டுள்ளேன். நான் இந்தியாவுக்கு இதுவரை 15, 16 முறை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை வந்தபோதுதான் எனது இதயமே நொறுங்கிப் போய் வலியுடன் திரும்பியுள்ளேன் என்றார் சனம்
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: