முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இன்னும் ஒரு வாரத்திற்குள் தீர்வு
காணப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.
டெல்லி, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 19ஆம் தேதி தமிழ் நாட்டை சேர்ந்த சதாசிவம் பதவியேற்றார்.
இதையடுத்து சதாசிவம் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை
அருகேயுள்ள காடப்பநல்லூருக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை அவருக்கு, ஈரோடு சம்பத் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்
வளாகத்தில் அனைத்து வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா
நடைபெற்றது.
இதில் பேசிய தலைமை நீதிபதி சதாசிவம், '' செக்மோசடி, பெண்களுக்கு எதிரான
குற்றங்களை விசாரிக்க கூடுதல் நீதிமன்றம் அமைக்கப்படும். நீதிமன்றங்களை
அதிகரிக்க சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், முல்லைபெரியாறு அணைப்பிரச்னைக்கு இன்னும் ஒருவார காலத்திற்குள்
தீர்வு காணப்படும். வக்கீல்கள் தங்களது பிரச்னைகளுக்காக நீதிமன்ற
புறக்கணிப்பு செய்வது பிரச்னைக்கு தீர்வாகாது'' எனக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக