அழகிப்போட்டியில் வெற்றி பெற்று அதன்மூலம் சினிமாப்பட
மருத்துவ வாரியம் அவருக்கு 30 சதவிகிதம் ஊனம் ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை அளித்ததன் பெயரில் சம்பல்பூர் மோட்டார் விபத்து> தீர்ப்பாயம் 23.5 லட்சம் நஷ்டஈடு அளிக்கும்படி காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. காப்பீட்டு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, இந்தத் தொகை 14 லட்சமாகக் குறைக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து ரேகா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கிருந்த நீதிபதிகள் ஜி.வி.சிங்வி, வி.கோபாலகவுடா ஆகிய இருவரும் ரேகாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டனர். அவரது உடல் ஊனம் 30 சதவிகிதம்தான் என்றபோதிலும், ஒரு நடிகையின் தொழிலுக்கு அவரது முக அழகு ஒரு முக்கிய காரணமாகும். அதனை அவர் இந்த விபத்தில் இழந்ததால் அவரால் வாழ்நாள் முழுவதும் தன்னுடைய தொழிலில் ஈடுபடமுடியாது என்ற நடிகையின் தரப்பு வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நடிப்புத் தொழில் வாய்ப்பினை இழந்ததால் ரேகாவின் நஷ்டஈட்டினை, அவர் வழக்கு பதிவு செய்த சமயத்தில் 79.65 லட்சமாகக் கணக்கிட்டு, 2002ஆம் ஆண்டு முதல் இதற்கு 6 சதவிகிதம் வட்டியுடன் மொத்தம் 1.27 கோடி அவருக்குத் தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருடைய தாயாரின் இறப்பிற்காக 10.62 லட்சம் கணக்கிடப்பட்டு, அதற்கும் 6 சதவிகித வட்டியுடன் அளிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வெளியாகி உள்ளது.
வாய்ப்புகளையும் பெற்றவர் ரேகா ஜெயின் என்பவர். இவர் 2000மாவது ஆண்டில் சில தொலைக்காட்சித் தொடர்களிலும், மோ பரி கியே ஹபா என்ற ஒடியா திரைப்படத்திலும் நடித்தார். கதாநாயகியாக நடித்த இந்தத் திரைப்படத்திற்காக சிறந்த நடிகை மற்றும் அந்த வருடத்தின் சிறந்த புதுமுக நடிகை என்ற விருதுகளையும் அவர் பெற்றார். மேலும் ஒரு மலையாளப் படத்திலும், பல விளம்பரப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு மேலும் சில வாய்ப்புகள் வந்த நிலையில், 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதியன்று, டிரக் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இவரது முகத்தில் நிரந்தரமாகத் தழும்புகள் ஏற்பட்டன. மேலும், அவரது தாயாரும் இந்த விபத்தில் இறந்துபோனார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக