வியாழன், 17 மே, 2012

Female டாக்டரை சீரழித்து அபார்ஷன்.. Male டாக்டர் கைது

நைட் டியூட்டி'யில் காதல்: பெண் டாக்டரை சீரழித்து அபார்ஷன் செய்ய வைத்த டாக்டர் கைது!


சென்னை: சென்னையில் பெண் டாக்டரை சீரழித்த வழக்கில் பிரபல இருதய நோய் மருத்துவமனை டாக்டர் யோகேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேரில் உள்ள பிரபல இருதய நோய் சிகிச்சை மருத்துவமனையில் பணிபுரிபவர் டாக்டர் பிரீத்தி. அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது சொந்த ஊர் கேரள மாநிலம், கொல்லம் ஆகும். எனது தந்தை சவூதி அரேபியாவில் எண்ணெய் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்த்தார். நான் எம்.டி. படித்துள்ளேன். அதில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக முகப்பேரில் உள்ள பிரபல இருதய நோய் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் சேர்ந்தேன்.

அந்த மருத்துவமனை விருந்தினர் இல்லத்தில் நான் தங்கி இருந்தேன். எனக்கு மாதம் ரூ.30 ஆயிரம் உதவித்தொகை கொடுத்தனர்.
அதே மருத்துவமனையில் குழந்தை இருதய நோய் சிகிச்சை பிரிவில் டாக்டராக வேலை பார்த்தவர் டாக்டர் யோகேஷ். அவரும், நான் தங்கி இருந்த மருத்துவமனை விருந்தினர் இல்லத்தில்தான் தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக இரவுப்பணி பார்த்தபோது நெருங்கி பழகினோம். அந்த நெருக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறிவிட்டது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தார்.
அதை உண்மை என்று நம்பி என்னை, அவரிடம் ஒப்படைத்தேன். அதன் விளைவாக நான் கர்ப்பம் அடைந்தேன். எனது வயிற்றில் அவரது குழந்தை வளரும் விஷயத்தை டாக்டர் யோகேஷிடம் கூறினேன். அவர் சந்தோஷப்படுவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது.
அவர் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக பெரிய குண்டை தூக்கிப் போட்டார். அவரது மனைவியும் டாக்டர்தான். அவர் டெல்லியில் வேலைபார்த்தார். அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், அவர்கள் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடப்பதாகவும் சொன்னார்.
எனது வயிற்றில் வளரும் கருவை கலைத்துவிடச் சொன்னார். அவரது மனைவியிடம் முறையாக விவாகரத்து பெற்றதும், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், எனது தலையில் அடித்து சத்தியம் செய்தார்.

இதையும் உண்மை என்று நான் நம்பினேன். அவரது பேச்சை நம்பி எனது வயிற்றில் வளரும் கருவை கொல்லத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் கலைத்தேன். என்னை ரகசிய திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தினேன். ஆனால் அவர் அதற்கு மறுத்தார். இரவுப்பணியில் இருக்கும்போது என்னை படுக்கைக்கு மட்டும் அழைத்து தொல்லை கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் அவர் என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றுகிறார் என்று உறுதியாக தெரிந்து விட்டது. போலீசில் புகார் கொடுத்துவிடுவேன் என்று மிரட்டினேன். அதைப்பற்றி அவர் கவலைப்பட வில்லை. அவர் மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர்.

மாதம் ரூ.1.5 லட்சம் சம்பளம் வாங்குகிறார். திருமணம் செய்வதாக ஏமாற்றி என்னை சீரழித்துவிட்டார். அவர், எனக்கு கணவராக வரவேண்டும். அல்லது செய்த தவறுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுத்து அவரை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அவரது புகாரின்பேரில் போலீசார் டாக்டர் யோகேஷிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறுகையில், நான் பிரீத்தியை காதலித்தது உண்மை தான். ஆனால் அவரை திருமணம் செய்வதை விட சந்தோஷமாக சிறைக்கு செல்வேன். பிரீத்தி என்னைப் போன்று பல டாக்டர்களிடம் பழகியுள்ளார். ஆனால் என்னை மட்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். அவரது விருப்பப்படி சிறைக்கே செல்கிறேன் என்றார்.

இதையடுத்து போலீசார் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்து யோகேஷை கைது செய்தனர். அவரை நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். டாக்டர் யோகேஷுக்கும், பிரீத்திக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்போவதாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: