Viruvirupu
மேற்கு
மற்றும் மத்திய ஆபிரிக்கப் பகுதிகளில், மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறை
அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மில்லியன் குழந்தைகள், பட்டினிச் சாவை
எதிர்நோக்கி உள்ளதாக, கணிப்பிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் சாகெல் பகுதியில், ஒரு தலைமுறையே பட்டினி காரணமாக இறந்து போகலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் ‘குழுந்தைகளுக்கு உணவு’ திட்டம் இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அவையெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொரி கதையாகவே உள்ளது. ஆபிரிக்காவின் எண்ணை வளம் உடைய நாடுகளுக்கு உதவிகளை வாரி வழங்கும் பெரிய நாடுகள் எவையும், எதுவித வளமும் அற்ற மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கப் பகுதிகளை கண்டு கொள்வதாக இல்லை.
சமீபகாலமாக சீனா பல மில்லியன் டாலர் நிதியுதவியை ஆபிரிக்காவுக்கு அறிவிக்கிறது.
ஆனால், அதில் ஒரு டாலர்கூட, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நெர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த பல வருடங்களாகவே ஆபிரிக்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் பட்டியலில் உள்ளன.
என்னே ஆச்சரியம்! உதவிகள் சென்றடையும் ஆபிரிக்க நாடுகள் அனைத்திலும், எண்ணை அல்லது கனிம வளம் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!
ஐ.நா.வின் ‘குழுந்தைகளுக்கு உணவு’ திட்டம் இப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும், அவையெல்லாம் யானைப் பசிக்கு சோளப்பொரி கதையாகவே உள்ளது. ஆபிரிக்காவின் எண்ணை வளம் உடைய நாடுகளுக்கு உதவிகளை வாரி வழங்கும் பெரிய நாடுகள் எவையும், எதுவித வளமும் அற்ற மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்கப் பகுதிகளை கண்டு கொள்வதாக இல்லை.
ஆனால், அதில் ஒரு டாலர்கூட, பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நெர்லாந்து, ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த பல வருடங்களாகவே ஆபிரிக்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் பட்டியலில் உள்ளன.
என்னே ஆச்சரியம்! உதவிகள் சென்றடையும் ஆபிரிக்க நாடுகள் அனைத்திலும், எண்ணை அல்லது கனிம வளம் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!
பாலைவனத்தின்
புழுதிக் காற்றின் ஊடாக, குழந்தையை துக்கிச் செல்லும் பெண். சாகெல்
பெல்ட்டில் உள்ள சாத் நாட்டின் மொன்டோ கிராமத்தில் எடுக்கப்பட்ட போட்டோ
இது.
ஆபிரிக்காவில்
மொத்தம் 8 நாடுகளில் (Burkina Faso, Chad, Mali, Mauritania, Niger,
Cameroon, Nigeria மற்றும் Senegal) உள்ள குழந்தைகள் உணவுக்கு மட்டுமின்றி,
போதிய சுத்தமான தண்ணீருமின்றி தவிக்கின்றனர்.
வேளாண்மை
செய்வதற்கு போதிய நீர் வசதி கிடையாத காரணத்தாலேயே உணவுப் பஞ்சம் உச்சக்
கட்டத்தை அடைந்துள்ளது. அப்படியிருந்தும், புதிய வேளாண்மைத் திட்டங்கள்
ஏதும், இங்கு கொண்டுவரும் முயற்சிகள் நடைபெறவில்லை.
உணவு
பெறுவதற்கே இயலாத நிலையில் உள்ள குழந்தைகள், கல்வி கற்பதற்கு வாய்ப்பும்
கிடையாது. நேரமும் கிடையாது. அநேக குழந்தைகள் ஆடு, மாடுகளை மேய்ப்பதையே
முழு நேரத் தொழிலாக செய்ய வேண்டியுள்ளது.
சாத்
நாட்டின் சாகெல் பகுதியில் மட்டும் 127,000 குழந்தைகளுக்கு அவசர மருத்துவ
உதவி தேவை என UNICEF கணிப்பிட்டுள்ளது. இந்தக் கணிப்பீடு் 5 வயதுக்கு
உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே. மருத்துவ உதவி தேவைப்படும் 5 வயதுக்கு
மேற்பட்ட குழந்தைகள், மற்றும் பெரியவர்களின் எண்ணிக்கையை யாரும்
கணக்கெடுக்கவில்லை. உச்தேசக் கணக்காக, 1 மில்லியன் மக்களுக்கு அவசர
மருத்துவ உதவியும், உணவும் தேவை என்கிறது ஐ.நா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக