டெல்லி: தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இத்தாலிய
கடற்படையினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத்
தொடர்ந்து இந்தியாவுக்கான தூதரை இத்தாலி விலக்கிக் கொண்டுள்ளது.
இத்தாலிய கடற்படையினர் இருவரும் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் கொல்லம் நீதிமன்றம் கேரள போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து இந்தியாவுக்கான தூதர் கியாகோமோ சான்பெலிஸ் டி மோன்டிபோர்ட்டை இத்தாலி திரும்ப அழைத்துக் கொண்டது.
இதுதொடர்பாக இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `இத்தாலி பாதுகாவலர்கள் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக ஆலோசனை நடத்துவதற்கு இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைக்கப்பட்டு உள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக