சனி, 19 மே, 2012

போலீஸ் உயர் அதிகாரி? ராமஜெயம் பகைத்துக்கொண்டார்

  அவருக்கு இதில் பங்கு இருக்கலாம்’

''திருச்சி ராமஜெயம் கொலை விவகாரத் தில் இறக்கை கட்டிப் பறக்கும் வதந்திகள் இன்னமும் நின்றபாடில்லை. 'அவர் நள்ளிரவிலேயே கொலை செய்யப்பட் டார். முதல் நாள் இரவே வீட்டைவிட்டுக் கிளம்பிச் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் உண்மையான தகவல்களைச் சொல்லாமல் மறைப்பதால்தான், விசா ரணை நீண்டுகொண்டே போகிறது’ என்ற செய்தி சில தினங்களாக உலவுகிறது!'' என்றார் கழுகார்.
''திருச்சியில் நர்ஸை ஒருவரை போலீ ஸார் வளைத்திருப்பதாகத் தகவல் வந்ததே?''
''அவர் இறந்துபோன நேரம் பற்றிய சர்ச்சைகளை முதலில் சொல்லி விடுகிறேன். 'ராமஜெயம் போஸ்ட்மார்ட்டம் அறிக்கை யில் அவர் இறந்துபோனதற்கான காரணம் மட்டுமே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர் உயிர் பிரிந்த நேரத்தை உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் குறிப்பிடவில்லை.
இதனால், இரண்டாவது முறையாக போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்டதில், அவர் மார்ச் 29-ம் தேதி நள்ளிரவு 2.30 மணிக்கு முன்பே கொலை செய்யப் பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது’ என்று சிலர் இப்போது சொல்கிறார்கள். ஆனால் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள், தடயவியல் நிபுணர்கள் இதனை மறுக்கிறார்கள். 'இது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். ராமஜெயம் உடல் ஒரு முறைதான் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் இறந்த நேரத்தைக் குறிப்பிடவில்லை என்பது உண்மைதான். அப்படி நேரத்தைக் குறிப்பிட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்த விவரத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யும் மருத்துவர் ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்வார். காவல் துறை அதிகாரிகள் பிறகு உயிர் பிரிந்த நேரம் பற்றி தெரிவிக் கும்படி கேட்டனர். அதன் பிறகுதான், இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் எனக் கருதப்படும் நேரத்தைக் குறிப்பிட்டு அறிக்கை வழங்கப்பட்டது. இறந்த நேரத்தை உடலின் வெப்பத்தை வைத்தும் உடல் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்தும் கணிப்பார்கள். அதன்படி போஸ்ட்மார்ட்டம் செய்த மாலை 3 மணி நிலவரப்படி, ராமஜெயம் மரணித்து எட்டு முதல் 10 மணி நேரம் ஆகியிருக்கலாம் என மருத்துவர்கள் கணித்துள்ளனர். இறப்பு நிகழ்ந்த நேரத்தைத் தோராயமாகவே தெரிவிக்க முடியும். துல்லியமாகத் தெரிவிக்க முடியாது. அப்படித் தெரிவித்தால், அந்த மருத்துவரின் திறமை சந்தேகத்துக்கு உரியது’ என்று சொல்கிறார்கள்''

''ம்!''

''இந்தக் குழப்பமே இன்னமும் முடிவுக்கு வராத நிலையில் தான், இந்த நர்ஸ் மேட்டர் கிளம்பி உள்ளது. 'ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் வசிக்கும் நர்ஸ் ஒருவருடன் ராமஜெயத்துக்குப் பழக்கம் உண்டு. அந்தப் பெண்ணை சந்திக்கப் போன நேரத்தில்தான் ராமஜெயம் கடத்தப்பட்டார்’ என்று கிளம்பிய செய்தியைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை முன்பே போலீஸ் விசாரித்து அனுப்பி விட்டது. அவரைத்தான் மறுபடியும் விசாரணைக்கு அழைத்தார்கள்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த வதந்தி கிளம்பிய இரண்டு மணி நேரங்களில் போலீஸார் இந்தத் தகவலை மறுக்க ஆரம்பித்து விட்டார்கள்!''

''என்னவாம்?''

''இந்தப் பெண்ணின் உறவினர் ஒரு பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். அதில் ஒரு திருட்டு நடந்துள்ளது. அது சம்பந்தமான விசாரணையாம் அது. இதைச் சொன்னதும் அனைவருக்கும் சப்பென்று ஆகிவிட்டது!''

''உண்மையில் யார்தான் சம்பந்தப்பட்டு இருப்பார்கள்?''

''என்னுடைய சோர்ஸ் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். 'போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை அளவுக்கு அதிகமாக ராமஜெயம் பகைத்துக்கொண்டார். அவருக்கு இதில் பங்கு இருக்கலாம்’ என்கிறார்!''

''எந்த போலீஸ் அதிகாரியாம்?''

''போலீஸ்தான் கண்டுபிடிக்க வேண்டும்'' என்றபடி கழுகார் பறந்தார்!

thanks vikatan + rajmohan ,namakkal

கருத்துகள் இல்லை: