ஞாயிறு, 13 மே, 2012

விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் வேண்டுமென்றே ராமஜெயத்தின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்

நள்ளிரவுக்கு மேல் போலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. ஸ்டேஷனுக்கு அழைக் கப்படுகிறார்கள். அதிகாலை 3 மணி, 4 மணி வரை விசாரணை என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது போலீஸ். ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக தனிப்படை போலீசார் இப்படித்தான் ராமஜெயத்தின் நண்பர் களையும் அவருக்கு நெருக்கமான உறவினர்களையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
திருச்சிவாசிகளோ, ""ராமஜெயத்தின் உடல் கிடந்த இடம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்டது. முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஜெ. ஆட்சி வந்தபிறகு ராமஜெயம் கொலை உள்பட மூன்று கொலைகள் நடந்திடிச்சி. எதிலுமே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கல. திருச்சி பகுதியில் 7 கொலைகள் நடந்திருக்கு. கொலைகாரர்கள் யாரும் சிக்கலை. கொலை செய்யப்பட்டவங்க யாரோ, அவங்களுக்கு நெருக்கமானவங்கதான் தினம் தினம் போலீசாரால் டார்ச்சர் செய்யப்படுறாங்க'' என்கிறார்கள் பரிதாபக் குரலில். ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை தாகூர் தெருவைச் சேர்ந்த அரக்காயி என்ற 65 வயது மூதாட்டி, தன் வீட்டின் அருகே தென்னை மட்டை எடுக்கச் சென்றபோது, அடையாளம் தெரியாதவர் களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, கழுத்தை இரும்பு வயரால் இறுக்கி கொலை செய்யப்பட்டு, பிணமாகக் கிடந்தார். கடந்த ஜனவரி 10 அன்று நடந்த இந்தக் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மூதாட்டி அரக்காயி குடும்பத்தினரைச் சந்தித்தோம். நாம் கேள்வி கேட்டதுமே, நம் வாயைப் பொத்தியவர்கள், ""உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறோம். போலீஸ் நடவடிக்கை பற்றி எதுவும் கேட்காதீங்க. எங்களைத்தான் கொலைகாரர்கள் போல விசாரிக்கிறாங்களே தவிர, வெளியிலே எந்த விசாரணையும் நடக்கல. நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ராமஜெயம் கொலைக்குப் பிறகு, போலீஸ் கவனம் அங்கே திரும்பிட்டதால நாங்க இப்பதான் நிம்மதியா இருக்கோம். இப்படியே விட்டுட்டாலே போதும்'' என்றனர் கலங்கிய கண்களோடு.

அதே திருவானைக்காவல் கந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசாங்க முதல் நிலை ஊழியர் ஒருவரை சந்தித்தோம். பாண்டிச்சேரி பி.டபிள்யூ.டி. சூப்பிரண்டன்ட் இன்ஜினியராக 33 வருஷம் வேலைபார்த்து ரிடையர்டான கனகராஜ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ""நான் ரிடையர்டாகி, புது இன்ஜினியரை பணியில் அமர்த்தி பிப்ரவரி 1-ந் தேதியோடு என்னோட வாழ்க்கையில் அத்தனை சந்தோஷமும் முடிஞ்சிடிச்சிங்க. பாண்டியி லிருந்து தினமும் சாயங்காலம் என் மனைவி லதாதேவிகிட்டே பேசுவேன். அன்னைக்கு ரிடையர்மெண்ட் ஃபங்ஷன் முடிவதற்கே நைட் 9.30 மணிக்கு மேலாயிடிச்சி. அதனால என் மனைவிகிட்டே பேசலை. மறுநாள் காலையிலே பேச முயற்சி செய்தால் பதிலே இல்லை. திருச்சிக்கு கிளம்பினேன். அப்ப டி.வி.யிலே 30 பவுன் நகைக்காக 50 வயது பெண்மணி கொலைன்னு என் மனைவியின் பெயரோடு செய்தி வெளியானதைப்பார்த்து பதறிப்போய் கிளம்பி வந்தேன். வீட்டு மாடியில், எரிஞ்சு கிடந்த என் மனைவியோட உடலைப் பார்த்துக் கதறினேன். போலீஸோ என்னையேதான் சுற்றி சுற்றி விசாரிக்குது. இது தற்கொலைன்னு கேஸை முடிக்கப் பார்க்குறாங்க. உண்மையான குற்றவாளி சிக்குறவரை நான் இந்த வழக்கை விடமாட்டேன்'' என்கிறார் கனகராஜ் அந்த சோகத்திலும் உறுதியான குரலில்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள ராஜாகாலனியைச் சேந்தவர் ராமநாதன். போன வருடம் செப்டம்பர் மாதம் 25-ந் தேதியன்று இரவு சங்கம் ஓட்டலில் லதா ஜூவல்லரி நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றுவிட, ராமநாதன் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டுபேர் அதிரடியாக உள்ளே நுழைந்து, வீட்டுக் காவலாளி ஜோதிசித்திரையைக் கழுத்தில் வெட்டிக்கொன்றதுடன், அலறல் கேட்டு ஓடிவந்த ராமநாதனின் கையிலும் பலமாக வெட்ட, அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். ஜோதிசித்திரை கொல்லப்பட்டு 8 மாதங்களாகியும், கொலையாளியை கண்டோன் மெண்ட் போலீசார் பிடித்தபாடில்லை. கண்டோன் மெண்ட் இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இப்போது ராமஜெயம் கொலைவழக்கு ஸ்பெஷல் டீமிலும் இடம்பெற்றிருக்கிறார்.

ராமஜெயம் கொலை வழக்கில் தமிழகம் முழுவதுமுள்ள ரவுடிகள் உள்பட 1750 பேரை விசாரித்துவிட்டோம் என்கிறார்கள் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்தவர்கள். டெல்டா ரவுடிகளையும் காக்குவீரனை யும் கஸ்டடி எடுத்து விசாரித்ததில், காக்குவீரனின் கால் எலும்பு உடைந்ததுதான் மிச்சம். ரவுடி குணா வின் கூட்டாளி சுந்தரபாண்டியன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவனைப் பிடித்து, ராமஜெயத் தின் மனைவியின் செல்போனில் கொலைகாரன் பேசிய ஆடியோவைப் போட்டுக் காட்டி, இது யாருடைய குரல் என்று விசாரணை செய்தும் துப்பு கிடைக்கவில்லையாம். கொலையில் சம்பந்தப்படாமல் போலீசின் டார்ச்ச ருக்குள்ளாவதை விட கொலையே செய்துவிட்டுத் தப்பித்திருக்கலாம் போல என்று அலறுகிறார்கள் ட்ரீட்மெண்ட் எடுத்துவரும் ரவுடிகள்.

உண்மைக் கொலைகாரர் களைக் கண்டுபிடிக்க முடியாத போலீஸ் டீம், வேண்டுமென்றே ராமஜெயத்தின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை அலைக்கழிக்கப்படுகிறார்கள். ராமஜெயத்தின் நண்பர்களோ, ""நாங்கள் தான் ராமஜெயம் கடத்தப்பட்டார் என்ற தகவலை போலீசுக்கு சொன்னோம். வெள்ளைநிற வெர்ஷா வாகனம் பற்றியும் சொன்னோம். ராமஜெயத்தின் எல்லா நடவடிக்கைகளையும் சொல்லியிருக்கோம். கொலைகாரர்கள் பயன்படுத்திய டேப், கம்பி, கடத்தப்பட்ட இடம், கொலை நடந்த இடம் இதையெல்லாம் போலீஸ் கண்டுபிடிக்க உதவியதே நாங்க சொன்ன தகவல்கள்தான். அதை வச்சி கொலைகாரர்களைப் பிடிக்காமல் எங்களையே திரும்பத் திரும்ப டார்ச்சர் செய்றாங்க. போலீஸோட நோக்கம் என்னன்னு தெரியல'' என்கிறார்கள் வேதனையுடன்.

போலீஸ் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரின் தொகுதியிலேயே போலீசாரின் விசாரணை லட்சணம் இப்படித் தான் இருக்கிறது.

-ஜெ.டி.ஆர்

கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

நள்ளிரவுக்கு மேல் போலீஸ் ஜீப் வந்து நிற்கிறது. ஸ்டேஷனுக்கு அழைக் கப்படுகிறார்கள். அதிகாலை 3 மணி, 4 மணி வரை விசாரணை என்ற பெயரில் சம்பந்தமில்லாமல் கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது போலீஸ். ராமஜெயம் கொலை வழக்குத் தொடர்பாக தனிப்படை போலீசார் இப்படித்தான் ராமஜெயத்தின் நண்பர் களையும் அவருக்கு நெருக்கமான உறவினர்களையும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

திருச்சிவாசிகளோ, ""ராமஜெயத்தின் உடல் கிடந்த இடம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்டது. முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் ஜெ. ஆட்சி வந்தபிறகு ராமஜெயம் கொலை உள்பட மூன்று கொலைகள் நடந்திடிச்சி. எதிலுமே குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கல. திருச்சி பகுதியில் 7 கொலைகள் நடந்திருக்கு. கொலைகாரர்கள் யாரும் சிக்கலை. கொலை செய்யப்பட்டவங்க யாரோ, அவங்களுக்கு நெருக்கமானவங்கதான் தினம் தினம் போலீசாரால் டார்ச்சர் செய்யப்படுறாங்க'' என்கிறார்கள் பரிதாபக் குரலில்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை தாகூர் தெருவைச் சேர்ந்த அரக்காயி என்ற 65 வயது மூதாட்டி, தன் வீட்டின் அருகே தென்னை மட்டை எடுக்கச் சென்றபோது, அடையாளம் தெரியாதவர் களால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, கழுத்தை இரும்பு வயரால் இறுக்கி கொலை செய்யப்பட்டு, பிணமாகக் கிடந்தார். கடந்த ஜனவரி 10 அன்று நடந்த இந்தக் கொலை தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

மூதாட்டி அரக்காயி குடும்பத்தினரைச் சந்தித்தோம். நாம் கேள்வி கேட்டதுமே, நம் வாயைப் பொத்தியவர்கள், ""உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறோம். போலீஸ் நடவடிக்கை பற்றி எதுவும் கேட்காதீங்க. எங்களைத்தான் கொலைகாரர்கள் போல விசாரிக்கிறாங்களே தவிர, வெளியிலே எந்த விசாரணையும் நடக்கல. நாங்க பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. ராமஜெயம் கொலைக்குப் பிறகு, போலீஸ் கவனம் அங்கே திரும்பிட்டதால நாங்க இப்பதான் நிம்மதியா இருக்கோம். இப்படியே விட்டுட்டாலே போதும்'' என்றனர் கலங்கிய கண்களோடு.

அதே திருவானைக்காவல் கந்தன் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசாங்க முதல் நிலை ஊழியர் ஒருவரை சந்தித்தோம். பாண்டிச்சேரி பி.டபிள்யூ.டி. சூப்பிரண்டன்ட் இன்ஜினியராக 33 வருஷம் வேலைபார்த்து ரிடையர்டான கனகராஜ் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், ""நான் ரிடையர்டாகி, புது இன்ஜினியரை பணியில் அமர்த்தி பிப்ரவரி 1-ந் தேதியோடு என்னோட வாழ்க்கையில் அத்தனை சந்தோஷமும் முடிஞ்சிடிச்சிங்க. பாண்டியி லிருந்து தினமும் சாயங்காலம் என் மனைவி லதாதேவிகிட்டே பேசுவேன். அன்னைக்கு ரிடையர்மெண்ட் ஃபங்ஷன் முடிவதற்கே நைட் 9.30 மணிக்கு மேலாயிடிச்சி. அதனால என் மனைவிகிட்டே பேசலை. மறுநாள் காலையிலே பேச முயற்சி செய்தால் பதிலே இல்லை. திருச்சிக்கு கிளம்பினேன். அப்ப டி.வி.யிலே 30 பவுன் நகைக்காக 50 வயது பெண்மணி கொலைன்னு என் மனைவியின் பெயரோடு செய்தி வெளியானதைப்பார்த்து பதறிப்போய் கிளம்பி வந்தேன். வீட்டு மாடியில், எரிஞ்சு கிடந்த என் மனைவியோட உடலைப் பார்த்துக் கதறினேன். போலீஸோ என்னையேதான் சுற்றி சுற்றி விசாரிக்குது. இது தற்கொலைன்னு கேஸை முடிக்கப் பார்க்குறாங்க. உண்மையான குற்றவாளி சிக்குறவரை நான் இந்த வழக்கை விடமாட்டேன்'' என்கிறார் கனகராஜ் அந்த சோகத்திலும் உறுதியான குரலில்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பக்கத்தில் உள்ள ராஜாகாலனியைச் சேந்தவர் ராமநாதன். போன வருடம் செப்டம்பர் மாதம் 25-ந் தேதியன்று இரவு சங்கம் ஓட்டலில் லதா ஜூவல்லரி நடத்திய ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றுவிட, ராமநாதன் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் இரண்டுபேர் அதிரடியாக உள்ளே நுழைந்து, வீட்டுக் காவலாளி ஜோதிசித்திரையைக் கழுத்தில் வெட்டிக்கொன்றதுடன், அலறல் கேட்டு ஓடிவந்த ராமநாதனின் கையிலும் பலமாக வெட்ட, அவர் மயங்கிச் சரிந்துவிட்டார். ஜோதிசித்திரை கொல்லப்பட்டு 8 மாதங்களாகியும், கொலையாளியை கண்டோன் மெண்ட் போலீசார் பிடித்தபாடில்லை. கண்டோன் மெண்ட் இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி இப்போது ராமஜெயம் கொலைவழக்கு ஸ்பெஷல் டீமிலும் இடம்பெற்றிருக்கிறார்.

ராமஜெயம் கொலை வழக்கில் தமிழகம் முழுவதுமுள்ள ரவுடிகள் உள்பட 1750 பேரை விசாரித்துவிட்டோம் என்கிறார்கள் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்தவர்கள். டெல்டா ரவுடிகளையும் காக்குவீரனை யும் கஸ்டடி எடுத்து விசாரித்ததில், காக்குவீரனின் கால் எலும்பு உடைந்ததுதான் மிச்சம். ரவுடி குணா வின் கூட்டாளி சுந்தரபாண்டியன் சிறையிலிருந்து வெளியே வந்தபோது அவனைப் பிடித்து, ராமஜெயத் தின் மனைவியின் செல்போனில் கொலைகாரன் பேசிய ஆடியோவைப் போட்டுக் காட்டி, இது யாருடைய குரல் என்று விசாரணை செய்தும் துப்பு கிடைக்கவில்லையாம். கொலையில் சம்பந்தப்படாமல் போலீசின் டார்ச்ச ருக்குள்ளாவதை விட கொலையே செய்துவிட்டுத் தப்பித்திருக்கலாம் போல என்று அலறுகிறார்கள் ட்ரீட்மெண்ட் எடுத்துவரும் ரவுடிகள்.

உண்மைக் கொலைகாரர் களைக் கண்டுபிடிக்க முடியாத போலீஸ் டீம், வேண்டுமென்றே ராமஜெயத்தின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.

நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை அலைக்கழிக்கப்படுகிறார்கள். ராமஜெயத்தின் நண்பர்களோ, ""நாங்கள் தான் ராமஜெயம் கடத்தப்பட்டார் என்ற தகவலை போலீசுக்கு சொன்னோம். வெள்ளைநிற வெர்ஷா வாகனம் பற்றியும் சொன்னோம். ராமஜெயத்தின் எல்லா நடவடிக்கைகளையும் சொல்லியிருக்கோம். கொலைகாரர்கள் பயன்படுத்திய டேப், கம்பி, கடத்தப்பட்ட இடம், கொலை நடந்த இடம் இதையெல்லாம் போலீஸ் கண்டுபிடிக்க உதவியதே நாங்க சொன்ன தகவல்கள்தான். அதை வச்சி கொலைகாரர்களைப் பிடிக்காமல் எங்களையே திரும்பத் திரும்ப டார்ச்சர் செய்றாங்க. போலீஸோட நோக்கம் என்னன்னு தெரியல'' என்கிறார்கள் வேதனையுடன்.

போலீஸ் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வரின் தொகுதியிலேயே போலீசாரின் விசாரணை லட்சணம் இப்படித் தான் இருக்கிறது.

-ஜெ.டி.ஆர்

கருத்துகள் இல்லை: