புதன், 21 செப்டம்பர், 2022
இலங்கையின் 2500 வருட பௌத்த கலாசாரம் இலங்கையை திவால்நிலை நோக்கி இழுத்துச் சென்றுள்ளது - திருமதி .டயானா கமகே MP
இவர் அண்மைக்காலமாக செய்திகளில் பலமாக வலம் வருகிறார்.
குறிப்பாக கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்பது போன்ற பல முற்போக்கு கருத்துக்களை பேசுகிறார்
மேலும் பெண்ணுரிமை விடயங்களிலும் ஊடகங்களின் வெளிச்சம் இவர்மீது அதிகமாக விழுகிறது
எல்லாவற்றையும் விட இவர் தற்போது பௌத்த கலாச்சாரம் பற்றி தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவையாகும்.
இது போன்ற பல விடயங்களை டெய்லி மிரர் பத்திரிகைக்காக இவர் வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார் . அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே தமிழில் வாசிக்கலாம்
முழு பேட்டி ஆங்கிலத்தில் உள்ளது
கேள்வி , கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்த உங்கள் அறிக்கை தலைப்புச் செய்தியாகியுள்ளது.
இது பௌத்த நாடாக இருப்பதால் உங்களது பிரேரணை நாட்டின் விழுமியங்களுக்கு எதிரானது என்ற வாதம் உள்ளது. கஞ்சா எவ்வாறு நாட்டிற்கு டாலர்களை ஈர்க்கும் என்பதை விளக்க முடியுமா?
திமுக மாவட்ட செயலாளர் தேர்தல்! க்ளைமாக்ஸை அடைந்துள்ள உட்கட்சி ..
எம்பி தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் துடிப்பானவர்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின்.
அதன்படியே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரை பற்றிய செயல்பாட்டு மதிப்பீட்டு ஆய்வை ரகசியமாக நடத்தினார். சபரீசனின் மேற்பார்வையில் நடந்த இந்த ஆய்வில் திமுகவின் மொத்த மாவட்டச் செயலாளர்களையும் பச்சை. மஞ்சள், சிகப்பு என்ற தரவரிசைப்படி பட்டியலிட்டனர்.
தனுஷ்கோடியில் குழந்தைகளுடன் தவித்த 12 இலங்கையர் மீட்பு
மாலைமலர் : இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு படகு மூலம் அகதிகளாக தப்பிச் சென்ற நிலையில், தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று (20) செவ்வாய்க்கிழமை காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து விசாரணைக்கு பின் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்தியா கடும் கண்டனம்! கனடாவில் சுதந்திர காலிஸ்தான் அமைவதற்கான வாக்கெடுப்பு Khalistan Referendum in Canada
.livemint.com : கனேடிய சீக்கியர்கள் ஒன்டாறியோ மாகாணத்தின் பிராம்ப்டனில் காலிஸ்தான் பொது வாக்கெடுப்புக்கு வாக்களித்ததில் கலந்து கொண்டனர், சுமார் 100,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் பங்கு பற்றியதாக தெரிகிறது.
இந்த பொது மக்கள் வாக்கெடுப்பு காலிஸ்தானி சார்பு குழுவான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (SFJ) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
வாக்கெடுப்புக்கு வாக்களிக்க ஏராளமான ஆண்கள், பெண்கள் வரிசையில் நிற்பதை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கிறது
2019 இல் இந்தியாவில் SFJ சட்டவிரோத சங்கமாக தடை செய்யப்பட்டது. \
காலிஸ்தான் என்ற புதிய ஒரு நாட்டை உருவாக்குவதற்காக பஞ்சாப் சுதந்திர வாக்கெடுப்புக்கு SJF என்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, நாட்டில் வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் ஆதரவு கொடுப்பதாக இந்திய அரசாங்கம் எச்சரித்துள்ளது.
செவ்வாய், 20 செப்டம்பர், 2022
சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவருக்கு எச்சரிக்கைக் கடிதம்: டி.கே.எஸ். இளங்கோவன் தகவல்!
திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், தான் திமுகவில் இருந்தும் அரசியலில் இருந்துமே விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) திமுக செய்தித் தொடர்புத் துறை செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
ஏற்கனவே திமுகவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கடந்த சில வாரங்களாக தனது ஃபேஸ்புக் பதிவில் திமுக தலைமையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார்.
நாமகிரிப்பேட்டை பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம் கொலை . சந்தேக மரணம் என்று பதிவு செய்த காவல்துறை
![]() |

முனைவர். மு. சித்தார்த் ஆபிரகாம் : நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த காவலாளி பரமசிவம்,
இந்த நிலையில் (இடுப்பு கட்டப்பட்டு, கால்கள் கட்டப்பட்டு) நிலையில் சடலத்தை பார்த்து கொலைக்கான அனைத்து முகாந்திரமும் தெளிவாக இருந்தும்,
இது கொலை (302) கிடையாது இது சந்தேக மரணம் (174) தற்கொலை என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது..\
தினத்தந்தி :நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி கொலை தூக்கில் தொங்க விட்ட மர்ம கும்பலுக்கு வலைவீச்சு
உக்கிரேனில் அகப்பட்ட இலங்கை மாணவர்களின் நகங்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய ரஷிய படையினர் .. அதிர்ச்சி செய்தி
![]() |
BBC Tamil : யுக்ரேனின் லீயம் நகரை மீண்டும் தன்வசமாக்கியுள்ளது அந்நாட்டு ராணுவம். அங்கு ரஷ்ய ராணுவம் ஆக்கிரமித்திருந்தபோது பதிவான பல வகை கொடுமைகள் குறித்த குற்றச்சாட்டுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அதில் குறிப்பாக, இலங்கையர்கள் குழுவொன்று மாதக்கணக்கில் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த மக்களின் கதை இங்கே.
நாங்கள் இங்கிருந்து உயிரோடு வெளியேறுவோம் என்றே நினைக்கவில்லை என்கிறார் திலூஜன் பத்தினஜகன். கடந்த மே மாதம் ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய ஏழு பேரில் இவரும் ஒருவர்.
ரஷ்யா, யுக்ரேன் இடையே மோதல் தீவிரம் அடைந்தபோது, யுக்ரேனின் வடகிழக்கில் உள்ள குப்யான்ஸ்க் நகரிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள கார்கிவ் நகரம் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி அதை நோக்கிய நெடிய நடை பயணத்தை இந்த இலங்கையர்கள் தொடங்க ஆயத்தமாகினர்.
பெங்களூரு காதலியின் நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த டாக்டர் அடித்து கொலை
மாலாமலர் : பெங்களூரு:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் விகாஸ் ராஜன்(வயது 27). உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்த இவர், \சென்னையில் சில காலம் மருத்துவராக பணியாற்றியிருக்கிறார்.
பின்னர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். அத்துடன், வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.
இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சமுக வலைத்தளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
![]() |
மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகளில் தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, கடந்த 2018-ம் ஆண்டு, மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் மீது போலீசார் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
நக்கீரன் குழுவினரைத் தாக்கிய 10 பேர் மீது வழக்கு; 5 பேர் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கிராமத்தில் இயங்கி வருகிறது சக்தி தனியார் பள்ளி. இந்த பள்ளியில், கடந்த ஜூலை 13ம் தேதி, மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்றது.
நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல்; பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்
நக்கீரன் : கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மான முறையில் உயிரிழந்தார்.
இது தொடர்பான செய்திகளை நமது நக்கீரனில் தொடர்ந்து விசாரணை செய்து வெளியிட்டுவருகிறோம். அந்த வகையில் நேற்று நமது முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருண் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இந்த வழக்கில் தற்போது 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
பிரிட்டன் இந்து - முஸ்லிம் மோதல்.. கலவர பகுதிகளில் பிரிட்டன் போலீஸ் கடும் நடவடிக்கை
பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லெய்செஸ்டர் நகரத்தில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
திமுக சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சிப் பதவியிலிருந்து ராஜினாமா?: 4 முக்கிய காரணங்கள்!
திமுகவின் தலைமைக் கழக நிர்வாகியாகக் கருதப்படும் துணைப் பொதுச் செயலாளர் பதவி என்பது கெளரவமான பதவி மட்டுமல்ல, தலைமைக் கழகத்துக்கான உயர்பொறுப்புகளுக்குச் செல்வதற்கான நுழைவாயிலும்கூட.
அப்படிப் பார்க்கையில் திமுகவில் தற்போது சுப்புலட்சுமி ஜெகதீசன், ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகிய ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் இருக்கிறார்கள்.
ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை வெட்டி ஈரான் பெண்கள் போராட்டம்.. இஸ்லாமிய போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம்
இதற்கிடையே, ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைது செய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. எனினும், இளம்பெண் காவலில் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை போலீசார் மறுத்துள்ளனர்.
திங்கள், 19 செப்டம்பர், 2022
இந்தியாவில் உள்ள இலங்கையர்கள் தாயகம் திரும்ப மறுப்பு! இலங்கை தமிழ் கட்சிகளின் வாக்குவேட்டைக்காக அமைப்பு' (OFERR) ?
![]() |
பிரபுராவ் ஆனந்தன் - பிபிசி தமிழுக்காக : இலங்கை இறுதி கட்ட போரின்போது இந்தியாவில் அகதியாக தஞ்சம் அடைந்த இலங்கை அகதிகளை மீண்டும் அவர்களின் தாயகத்துக்கே அழைத்து வர இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழு ஒன்றை நியமித்துள்ளார். ஆனால், தங்களுடைய இலங்கைக்கு திரும்ப பெரும்பாலான இலங்கை தமிழர்கள் விரும்பவில்லை என்று தமிழ்நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட இறுதி கட்ட போரின் போது இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் இலங்கை அழைத்து வர வேண்டும் என 'ஈழ அகதிகள் புனர் வாழ்விற்கான அமைப்பு' (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இது குறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
அப்போது இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து அதில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அதிகாரி, வெளிவிவகார அமைச்சரக உயர் அதிகாரிகள், மற்றும் நீதி அமைச்சகத்தின் சிறப்பு அதிகாரிகளை உறுப்பினர்களாக நியமித்தார்.
நயன்தாரா நடிப்பில் இருந்து விலக தீர்மானம் .. திரைப்பட தயாரிப்பில் ஈடுபடுவாராம்
அந்த வகையில் தற்போது இந்தியில் 'ஜவான்', மலையாளத்தில் 'கோல்ட்', தெலுங்கில் 'காட்ஃபாதர்' உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். மேலும் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில், அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும், இதனையடுத்து தனது 75-வது படத்திலும் நடிக்கவுள்ளார்.
இதனிடையே தனது கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
சண்டிகர் மாணவிகளை ஆபாச வீடியோ - சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை
மொகாலி:
பஞ்சாப் மாநிலம் மொகாலி நகரில் சண்டிகர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
இதில் படிக்கும் மாணவிகள், தங்களை ஆபாசமாக வீடியோ எடுத்தாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் வீடியோ எடுத்த மாணவி உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்
நிலம் வாங்கும் போது ஏமாறாமல் இருக்க கவனிக்க வேண்டிய மிக முக்கிய விடயங்கள் ..
பஷீர் அஹமது : ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!*
1.முதன் முதலில் *computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.*
Zero value நிலம் EC யில் *நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.*
2.Double Document நிலம்.
Power of attorney(POA) double document
அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.
POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் *Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள்* POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.
அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது *power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா* என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.
3.உயில் பத்திர நில double document.
தைவான் மீது சீனா படையெடுப்பு நடத்தினால்...! அமெரிக்கா தைவானை பாதுகாக்கும் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சீனா தைவானை சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதன் பின்னரும் அமெரிக்க எம்.பி.க்கள் மற்றும் அமெரிக்க மாகாணங்களின் கவர்னர்கள் தொடர்நது தைவானுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அமெரிக்கா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் தைவானுக்கு 1.09 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8ஆயிரத்து 688 கோடி) மதிப்பிலான ராணுவ ஆயுதங்களை விற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
1962 தேர்தலில் திமுகவின் வளர்ச்சி . வரலாற்று செய்தி... யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை
தமிழ்நாட்டை பொறுத்தவரை கிராம நகர பகுதிகள் பலமாக வாக்களிப்பு நடந்திருக்கிறது. சென்ற தேர்தலில் காங்கிரஸ் 44 வீத வாக்குகளை பெற்றது.
இம்முறை 46 சதவீத வாக்குகளை பெற்றும் அதன் பலம் 138 ஆக குறைந்திருக்கிறது.
இதற்கு மாறாக 1957ஆம் ஆண்டு 14 சதவீத வாக்குகளை பெற்ற திமுக இம்முறை 27 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறது. அதாவது 100 சதவீத அதிகரிப்பு .
1957 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக 117 அபேட்சகர்களை நிறுத்தியதால் 15 ஸ்தானங்கள் அதற்கு கிடைத்தது
இம்முறை அது நிறுத்திய 142 அபேட்சகர்களில் 50 பேர் வெற்றி பெற்றதனால் கட்சியின் பலம் வெகுவாக அதிகரித்துள்ளது .
கருணாநிதி ஒருவரை தவிர அத்தனை அங்கத்தவர்களுக்கும் புதிதாக சட்டசபைக்கு வந்தவர்கள் .
மில்லியன் ஆப்கானிய பெண்களின் கல்வியை பறித்த தாலிபான்கள் !
இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.
காலில் விழும் கலாசாரத்தை ஆதரிக்க தொடங்குகிறதா திமுக? என்ன சொல்கிறார்கள் தலைவர்கள்? - BBC News
![]() |
பிரமிளா கிருஷ்ணன் - - பிபிசி தமிழ் : சமீபத்தில் திமுகவின் சில மூத்த நிர்வாகிகள் திமுக தலைவர் ஸ்டாலின், அவர் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோரின் திருமண நாளின்போது, அவர்களின் காலில் விழுந்து மரியாதை செலுத்திய காட்சிகள் வெளியாகின. முன்னதாக, திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் காலில், தஞ்சாவூர் மேயர் இராமநாதன், மேயர் அங்கி உடையில் இருந்தபோது, விழுந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த இரண்டு காணொளிகளை தாண்டி சில நிகழ்வுகளில் திமுக தலைவர்கள் காலில் பிற தொண்டர்கள்
ஞாயிறு, 18 செப்டம்பர், 2022
துணை நடிகை தீபா தற்கொலை: டைரியில் எழுதிவைத்த காதலன் யார்?
அவர் எழுதி வைத்த டைரியில், தன் காதலன் குறித்து எழுதி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூரை சேர்ந்தவர் அமல நாதன். இவரது மகள் தீபா (எ)பவுவின் (29). இவர் வாழ்க்கை, துப்பறிவாளன், வாய்தா ஆகிய தமிழ் படங்களில், துணை நடிகையாக நடித்துள்ளார்.
சினிமாவில் நடிப்பதற்காக, சென்னை, விருகம்பாக்கம், மல்லிகை அவின்யூ,, செல்வரத்தினம் அடுக்குமாடி குடியிருப்பு, ஏ பிளாக்கில் தீபா வசித்து வந்தார்.இந்த நிலையில். இன்று காலை வீட்டில் தீபா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் கிடைத்து அருகில் வசிக்கும். நண்பர் பிரபாகரன் விரைந்து வந்தார். பின். சித்தூரில் உள்ள தீபா சகோதரர் ரமேஷ் மற்றும் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தந்தார்.
எலிசபெத் மகாராணி இறுதி நிகழ்வில் இந்திய இலங்கை ஜனாதிபதிகள் பங்கேற்பு . ரணில் விக்கிரமசிங்க -திரவுபதி முர்மு!
கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி காலமான, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியா பயணமாகியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று (17) அதிகாலை 3.15 மணியளவில் எமிரேட்ஸ் விமான சேவை விமானம் மூலம் நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த விமானம் துபாய் செல்வதோடு, அங்கிருந்து அவர்கள் லண்டனுக்கு பயணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
நேற்று பஞ்சான்குளம்... இன்று நாயக்கனூர். வீடு வாடகைக்கு கொடுத்தால் குலதெய்வம் கோபிக்குமாம் .. வைரலாகும் வீடியோ!
![]() |
நக்கீரன் : தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சான்குளம் எனும் கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறி பெட்டிக்கடையில் பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இது தொடர்பாக அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தீண்டாமை விதிக்கப்பட்டிருந்தது அனைத்து தரப்புகளிடமிருந்து கண்டனத்தை பெற்றது.
இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு வீடு வாடகைக்கு தர முடியாது என பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒன்று இதேபோல் மீண்டும் வைரலாகி வருகிறது.




.jpg)

