செவ்வாய், 16 அக்டோபர், 2012

டாஸ்மாக் கடைகளை மூட முடியாது: Trafic Ramasamy வழக்கு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட் அதிரடி

நாங்க அண்ணா நுலகத்த சமசீர் கல்வியதான் மூடுவோம் டாஸ்மாக்க மூட மாட்டோம்
 தமிழக அரசு நடத்தும், "டாஸ்மாக்' மதுபான கடைகளை மூட வலியுறுத்தி, "டிராபிக்' ராமசாமி தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் நேற்று, தள்ளுபடி செய்தது.
சென்னையைச் சேர்ந்த, "டிராபிக்' ராமசாமி, சென்னை ஐகோர்ட்டில், ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "தமிழக அரசே, "டாஸ்மாக்' என்ற பெயரில், மதுபான கடைகளைத் திறந்து, பொதுமக்களுக்கு, மதுபானங்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்' என, கோரியிருந்தார்.அந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், அவர், பொதுநலன் கோரும் மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு, நீதிபதிகள், டி.கே.ஜெயின் மற்றும் மதன் லோகர், ஆகியோர் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள், எம்.என்.கிருஷ்ணமணி மற்றும் ராஜா ராமன் ஆஜராகினர்.

ஈரான், கத்தார், சவுதி அரேபியா சிறைகளில் 72 தமிழக மீனவர்கள்

indian-fishermen
KARACHI: Pakistan on Monday arrested 33 Indian fishermen, weeks after it announced the release of all jailed Indian fishermen as a goodwill gesture, a statement saidதமிழக மீனவர்கள் ஈரான், கத்தார், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலே உள்ள சிறைச்சாலைகளில் பல நாட்களாக வாடிக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன?

ஈரான் நாட்டு அதிகாரிகளால் தமிழகத்தைச் சேர்ந்த 27 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டின் ஒரு தீவிலே உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியத் தூதரக அதிகாரிகளுக்குக் கூட இது பற்றி எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதைப் போலவே கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் பக்ரைன் நாட்டிலிருந்து கத்தார் நாட்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 29 மீனவர்கள் துபாயிலிருந்தும், கத்தாரிலிருந்தும் சென்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது ஈரான் நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையிலே வைக்கப்பட்டுள்ளார்கள்.

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வருக்கு முன் ஜாமீன்

Mrs Y.G. Parthasarathy of Padma Seshadri group of schools greets President A.P.J. Abdul Kalam on the occasion of her 80th birthday celebration at the group's T.Nagar school in city on Thursday. — Photo: R.Ragu

 சென்னை கேகே நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும்  உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது.நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியான வழக்கில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 304 (2) கவனக்குறைவால் கொலைக்குக் காரணமாக இருந்த குற்றமாக பதிவு செய்யப்பட்ட வழக்கினை, 304 (ஏ) பிரிவின் கீழ் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் கோரும் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இருவருக்கும் முன் ஜாமீன் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

திங்கள், 15 அக்டோபர், 2012

சல்மான் குர்ஷித் அறக்கட்டளையில் 16 இடங்களில் இன்று சோதனை!

சல்மான் குர்ஷித் நடத்தி வரும் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளையில்
Salman Khurshid with wife Louise
மோசடி நடைபெற வுள்ளதாக எழுந்துள்ள புகார் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளை புகார்கள் தொடர்பாக அதிரடி சோதனை நடத்த உ.பி. பொருளாதார குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை முடிவு செய்தது.இதன் அடிப்படையில் இன்று 16 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆவணங்களில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது

திருமணம் நிச்சயமான யாழ்ப்பாண பெண் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு

தமிழகத்திற்குள் நுழைய தடை  இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மோகன பிரியா (25). இலங்கை தமிழரான இவர் பள்ளி ஆசிரி யையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் லண்டனை சேர்ந்த உறவினர் அந்தோணி க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தோணியும் இலங்கை தமிழர் ஆவார். லண்டனுக்கு அகதியாக சென்று அங்கேயே குடியுரிமை பெற்று தங்கி விட்டார். அங்குள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்தோணி-மோகன பிரியா திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னையில் நடைபெற இருந்தது.

இருவரின் உறவினர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் திருமணத்தை முடித்து விட்டு மீண்டும் அந்தோணி லண்டனுக்கும், மோகன பிரியா இலங்கைக்கும் செல்ல முடிவு செய்திருந்தனர். அதன் பிறகு திருமண சான்றிதழை லண்டனில் காட்டி மோகன பிரியாவுக்கு லண்டன் விசா வாங்கி அங்கேயே குடியேற ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அந்தோணி 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். மணப்பெண் மோகன பிரியாவும், அவரது அக்காள் தர்ம ரத்தினமும் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து நேற்று சென்னை வந்தனர்.

பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆட்டம் முடிந்தது

பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிர்ப்பு!  தலிபான் சுட்ட மாணவி சிறப்பு விமானத்தில் பிரிட்டனுக்கு viruviruppu.com

இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்ததால், தலிபான் அமைப்பினரால் சுடப்பட்ட 14 வயது மாணவி மலாலா யூசஃப்சாய், மருத்துவ சிகிச்சைக்காக பிரிட்டனுன்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரை ஏற்றிக்கொண்டு சிறப்பு air ambulance விமானம் இன்று பிரிட்டனுக்கு புறப்பட்டு சென்றது.
ஐக்கிய அரபு எமிரேஸ் அரசினால் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தூதுக்குழு, இந்த சிறப்பு விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.
குழந்தைகள் வைத்திய சிகிச்சைகளில் உலகப் புகழ்பெற்ற வைத்தியசாலை, பர்மிங்ஹாம் நகரில் உள்ளது. பர்மிங்ஹாம் குவீன் எலிசபெத் ஹாஸ்பிடலில், அந்த பாகிஸ்தான் மாணவிக்கு அவசர மருத்துவ சிக்ச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிகிச்சைக்கான செலவுகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்கிறது.

இலங்கைக்கு சீன உதவியுடன் செயற்கை மழை

இலங்கையில் செயற்கை மழை பொழிய வைக்கும் முயற்சியில் சீனாவின் உதவியை இலங்கை அரசு கோரியிருப்பதாக, அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் செயற்கை மழையை பொழிய வைப்பதற்காக சீன அரசுடனும், நிபுணர்களுடனும்  பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், அவசரகால நிவாரண சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அம்பலாங்கொட, கொகல்ல கிராமிய சுகாதார நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் சீனா உதவியுடன் செயற்கை மழை வரவுள்ளது பற்றி தெரிவித்தார். “தீவிரவாதத்தை மட்டுமல்ல, வரட்சி போன்ற இயற்கையின் சவால்களையும் முறியடிப்பதற்கான தைரியம் அரசாங்கத்திடம் உள்ளது” என்றும் அவர் கூறினார்.யுடன்
சீன அரசுடன் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும், சீன நிபுணர்கள் குழு ஒன்று இலங்கையின் வரட்சியான பகுதிகளில் தங்கியிருந்து, செயற்கை மழைக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளை செய்யவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலேயே வரட்சி அதிகமுள்ள பகுதி, தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் உள்பட வட மாகாணம்தான்

ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடு.? ஆச்சர்யம்

-எல்.முருகராஜ்ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்< சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர். பார்த்த நமக்கு ஆச்சர்யம், இந்த காலத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு சாப்பாடா என்று! உள்ளே வாங்க விவரமா சொல்றேன் என்று மெஸ் உரிமையாளர் வெங்கட்ராமன் அழைத்துச் சென்றார்,

குர்ஷித் ராஜினாமா செய்யும்வரை கெஜ்ரிவால் ஓயமாட்டார்

 Congress Is Involved With Khurshid சல்மான் குர்ஷித்தை விடுவதாக இல்லை கெஜ்ரிவால்... சிறப்பு விசாரணை நடத்த கோரிக்கை

டெல்லி: அறக்கட்டளை மோசடி புகாரில் சிக்கியிருக்கும் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பதவியிலிருந்து விரட்டாமல் சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் ஓயப் போவதில்லை போல்...
சல்மான் குர்ஷித் மற்றும் அவரது மனைவி நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளையானது போலியான ஆவணங்கள் மூலம் அரசு நிதியை மோசடியாக பெற்றிருக்கிறது என்பது கெஜ்ரிவால் புகார். இதை சல்மான் குர்ஷித் மறுத்து வருகிறார். தாங்கள் மற்றுத்திறனாளிகளுக்காகத்தான் நிதியைப் பெற்றோம் என்று விளக்கமெல்லாம் கொடுத்திருக்கிறார். ஆனாலும் கெஜ்ரிவால் விடுவதாக இல்லை.
இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், சல்மான் குர்ஷித் அறக்கட்டளையின் நிதியைப் பெற்றவரில் ஒருவர் ஒரு சிறுகுறைபாடு கொண்டவர் இல்லை.. மேலும் பலர் எங்கே இருக்கிறார்கள்? என்றே தெரியவில்லை.

உடுமலையில் 6ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 8ம் வகுப்பு மாணவர்கள்!

 உடுமலைப்பேட்டை அருகே 6ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டதாக பெரும் அதிர்ச்சி தரும் புகார் எழுந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பேரதிர்ச்சியுடன் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர்.
அனைத்துப் பெற்றோரையும் மனம் பதை பதைக்க வைத்திருக்கிறது இந்த உடுமலைப்பேட்டை சம்பவம். உடுமலைப்பேட்டை அருகே உள்ளது பெருமாள்புதூர். அங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 6ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சிலர் சேர்ந்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோரும், பிற மாணவியரின் பெற்றோர்களும் பள்ளிகையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயகாந்த்: இனி அ.தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் தான்.

தே.மு.தி.க. 8-வது ஆண்டு தொடக்கவிழா 14.10.2012 மாலை நடந்தது.
கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் பிரச்னைகளுக்காக போராடுவது தான், தே.மு.தி.க.,வின் பணி. தமிழக மீனவர்கள், கண்ணீர் வடிக்க காரணம் கச்சத்தீவை தாரை வார்த்தது தான். எங்களுக்கு ஒரு வாய்ப்பு வரும் போது, முதல் வேலையே, கச்சத்தீவை மீட்பது தான்.
பவர் கட் செய்யும் அ.தி.மு.க., வின் பவரை கட் செய்ய மக்கள் தயாராகி விட்டனர். இனி அ.தி.மு.க.,வுக்கு இறங்குமுகம் தான். முதல் சறுக்கல், ஜனாதிபதி தேர்தலிலும், இரண்டாவது சறுக்கல், துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஏற்பட்டது. இலவசங்களை நிறுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகளில், பதவியேற்பு விழா நடத்தியே காலம் சென்று கொண்டிருக்கிறது.

மணி சங்கர் ஐயர்: 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது: மணி சங்கர் ஐயர்<இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி

ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர் கூறினார்.Rock-a-bye: Mani Shankar Aiyar and wife Suneet steal a few Lutyens momentsஉதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 45 வருடமாகின்றது. இன்னும் 45 வருடமானாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க முடியாது. காங்கிரஸில் எல்லோருமே தலைவர்கள். அதுதான் கட்சியில் இருக்கும் முக்கியப் பிரச்னை.நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. நாடாளுமன்றத்தை முடக்குவதால் பிரச்னைகளைப் பேச முடிவதில்லை. பேசினால்தான் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அதனை முடக்குவதால் பலன் ஏதும் இல்லை. கேஜ்ரிவால் தற்போது நடத்திக் கொண்டிருப்பது முழுக்க முழுக்க நாடகமே.

ZeeTamilTV சொல்வதெல்லாம் உண்மை'..புது அவதாரம் மக்கள் ரிப்போர்ட்டர்


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் பார்வையாளர்களையும் பங்கேற்கவைக்கும் வகையில் மக்கள் ரிப்போர்ட்டர் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளனர்.
கணவனை சந்தேகப்படும் மனைவி. மனைவி இருக்கும்போதே அடுத்த பெண்ணோடு தொடர்பு உள்ள கணவன். மாமியார் மருமகள் பிரச்சனை என குடும்ப சண்டையை ஊர் அறியச் செய்வதில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு பெரும் பங்குண்டு. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்மலா பெரியசாமி இதற்காக பஞ்சாயத்து செய்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சி இப்போது அடுத்த கட்டத்திற்கு தயாராகிறது. பார்வையாளர்களும் பங்கேற்கும் வகையில் `மக்கள் ரிப்போர்ட்டர்` என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பார்வையாளர்களை மக்கள் ரிப்போர்ட்டர்களாக ஆக்குவதே இதன் திட்டம்.

ஜெயாவின் ஜால்ரா பாண்டியனே காவல்துறையை வறுத்துவிட்டார்

காவல்துறையின் செயல்பாடு குறித்து தா.பாண்டியனே 'சர்டிபிகேட்' கொடுத்து விட்டார்... 
 தா.பாண்டியன் ::தமிழகத்தில் தற்போது காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொய் வழக்குகளை பதிவு செய்வது அதிகரித்துள்ளது
சென்னை: அதிமுகவுடன் அன்பும், நட்பும் பாராட்டி நெருக்கமாக இருந்து வரும் தா.பாண்டியனே தமிழக காவல்துறை குறித்து கடுமையான கருத்தை தெரிவித்திருப்பதிலிருந்தே, தமிழக காவல் துறையின் செயல்பாடுகள் எந்த திசையை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கின்றன என்பதை யூகித்துக்கொள்ளலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்

http://gnani.net/
இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம் வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும் ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக் காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும் படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி எடுக்கப்படும் படங்கள் இவை. ஹிந்தி சினிமாவின் பெரிய ஹீரோக்களாகக் கருதப்படும் ஆமீர் கான், ஷாருக் கான், அபிஷேக் பச்சன் போன்றவர்கள் கூட இந்த படங்களில் நடிக்க முன்வருகிறார்கள். ஆமீர்கான் தானே அப்படிப்பட்ட படங்களைத் தயாரிக்கிறார்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் டாஸ்மாக் சரக்கு' விற்பனை

தமிழகத்தில் நிலவி வரும் மின் தடையால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், "டாஸ்மாக்' ஊழியர்கள், "சரக்கு' விற்பனையை மேற்கொள்கின்றனர். "ஆல்கஹால்' எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டதால், ஆபத்தை அறியாமல், ஊழியர்கள் செயல்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும், 6,880 "டாஸ்மாக்' கடைகள், காலை, 10:00 முதல், இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன. இதே நேரத்தில் தான், "பார்'களும் இயங்குகின்றன. தமிழகம் முழுவதும், பல இடங்களில், பகல் நேரங்களில், மூன்று மணி நேரமே மின் வினியோகம் செய்யப்படும் நிலையில், இரவில், நேரத்துக்கு ஒரு முறை, மின்தடை செய்யப்படுகிறது.இதனால், மாலை, 6:00 மணிக்கு மேல், "டாஸ்மாக்' விற்பனை பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான கடைகளில், மின் தடை நேரங்களில்,மெழுகுவர்த்தி துணையுடன், விற்பனை நடக்கிறது.
குறுகலான கடைகளில், "சரக்கு' பாட்டில்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலேயே, மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்படுகிறது.ஒரு சொட்டு, "ஆல்கஹால்' மெழுகுவர்த்தியில் பட்டாலும், பெரிய அளவில் தீ விபத்து ஏற்படும். தெருவிளக்கில் படித்த மாமேதைகள் மாதிரி ....மெழுகு விளக்கில் குடித்த மா....போதைகள்.... வெளங்கிடும்.....

கிரைண்டர், மிக்சி, வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் அடக்கி வாசிக்க மந்திரிகளுக்கு உத்தரவு

காது கேட்காதவனுக்கு mp3 ப்ளேயர் , கண் தெரியாதவனுக்கு கேமிரா , அதே போல மின்சாரம் இல்லாத வீட்டுக்கு மின்சாதனங்கள் .... கொஞ்சம் ஓவராக தெரியவில்லை
விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் பேன் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, அ.தி.மு.க., மந்திரிகள், எம்.எல்.ஏ.,களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடையால், மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்ற காரணத்தால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இலவசமா பனை ஓலை விசிறி, ஆட்டாங்கல், அம்மிக்கல் கொடுத்தா மக்கள் அந்த கட்சிக்குதான் ஒட்டு போடுவாங்க , மக்கள் கொஞ்சம்கொஞ்சமா மின்சாரம் இல்லாமலையே வாழ கத்துகிட்டா இந்த மின்சார பிரச்சனையை ஒழிச்சரலாம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் பார்ப்பனர்கள் செல்வாக்கும் அதிகாரமும்

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் சட்டம்:
ஆதிக்க சக்திகளை எதிர்த்து உரிமையை மீட்க வேண்டும்
தி.மு.க. தலைவர் கலைஞர் கடிதம்
 அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் சட்டம் உச்சநீதிமன் றத்தில் முடக்கப்பட் டுள்ளது. அதிலிருந்து விடுவித்து உரிமை களை மீட்க வேண்டும் என்று தி.மு.க. தலை வர் கலைஞர் அவர் கள் இன்று முரசொலி யில் எழுதியுள்ள கடிதம் வருமாறு:
உடன்பிறப்பே,
தி.மு.கழக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் செயல் படுத்தப்படாமல் முடங் கிக் கிடக்கிறது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஏடு சுட்டிக்காட்டியுள்ளதை;  தமிழாக்கம் செய்து11-10-2012அன்றுவிடுதலை நாளேட்டில் வெளி யிட்டிருக்கிறார்கள்;  அதுகுறித்துத் தலை யங்கமும் தீட்டியிருக் கிறார்கள்.
தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்த தனது தோழர்கள் வந்து வழிபடும் உள்ளூர் தற்காலிகக் கோயில் ஒன்றில் நித்திய சடங்கு களைச் செய்து கொண் டும், மெழுகுவர்த்தி களை விற்றுக் கொண் டும், அக்கோவில் அறங் காவலர்களான கேச வனது தந்தையும் தாத் தாவும் இருந்து வந்தனர். அவர்களின் சாதி எது வாக இருந்தாலும், அதனைப் பற்றிக் கவ லைப்படாமல் அனைத்து சாதி இந் துக்களையும் கோவில் அர்ச்சகர்களாக ஆக்கு வதற்கான பயிற்சியை அளிக்க,   தமிழ்நாடு அரசு முன்வந்தபோது கேச வன் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண் டார்.  இதற்கான நீண்ட ஓராண்டுப் பயிற்சி முடித்து நான்கு ஆண்டு கள் கடந்தும் கேசவ னும், அவரைப் போன்ற தாழ்த்தப்பட்ட பிரி வைச் சேர்ந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற 250 பேரும், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பார்ப்பனர் சிலர் இது பற்றி வழக்குத் தொடுத் திருப்பதால், அர்ச்சகர் வேலை இதுவரை கிடைக்காமல் காத் திருக்கின்றனர்.  இத் தகைய நீண்டகாலத் தாமதமே இந்திய சமூகத் தில் பார்ப்பனர்கள் கொண்டிருக்கும் செல் வாக்கையும் அதிகாரத் தையும் காட்டுவதாகக் கூறுகின்றனர்.

அழகிரியை சிக்க வைக்க மதிவாணன் ஆபரேஷன்! இடையில் நடந்தது, எதிர்பாராத திருப்பம்!!

viruvirupu.com
கிரானைட் விவகாரத்தில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மதிவாணனுக்கு பதவி கொடுத்ததும், அதை மாற்றம் செய்ததும், மற்றொரு நபரை சிக்க வைக்கும் விளையாட்டு என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது. கிரானைட் விவகாரத்தில் நேரடியாக சம்மந்தப்படாத அந்த ‘மற்றொரு நபர்’, மு.க.அழகிரி என்று என்று கூறி அதிர வைக்கிறார்கள்.
மதிவாணனை, தொழில் துறையின் இணைச் செயலாளராக நியமிப்பதாக செப்டம்பர் 27-ல் அறிவித்தது, அரசு. இந்த அறிவிப்பு பலருக்கு ஷாக்  கொடுத்தது. காரணம், முறைகேட்டில் சிக்கிய அவர் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்ட தொழில் துறைதான், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கவனிக்கும் துறை.
இந்த விவகாரம் கோர்ட்வரை செல்லவே, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், “மறுநாளே அவரை அங்கிருந்து மாத்திட்டோமே” என்று சர்வ சாதாரணமாக கூறினார்! அவரை மாற்றியதாக அறிவிப்பு ஏதும் முறைப்படி வெளியாகியிருக்கவில்லை.
மதிவாணனை ஒரு முக்கிய ஆபரேஷனுக்காகவே அந்த பதவியில் கொண்டுபோய் வைத்தார்கள் என்கிறார்கள். மதிவாணன் மதுரையில் இருந்த காலத்தில், யாருடைய வற்புறுத்தல் காரணமாக ‘சில நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை அவரது வாயாலேயே சொல்ல வைப்பதுதான், அந்த ஆபரேஷனாம்.
அதாவது, ஒரு அரசு அதிகாரியாக, அரசு உயர்மட்டத்தில் இருந்து வந்த உத்தரவுகளை மதிவாணன் நிறைவேற்றினார். உத்தரவிட்டவர்களுக்கு இதில் ஆதாயம் உள்ளது என்று கேஸ் ஒரு யு-டர்ன் அடித்து, அழகிரி பக்கமாக திரும்பும் என்று கூறப்படுகிறது.

கலைஞர்: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்?

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்த நிலையிலும் மின் உற்பத்தியை தொடங்காதது குறித்து அதிமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மிழகத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் மின்வெட்டு தீரும் என்று மின்துறை அமைச்சர் பேசியுள்ளார். சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்த்து தமிழகத்தை மின்மிகு  மாநிலமாக ஆக்கிக் காட்டுவேன் என்று வாக்காளர்களை ஜெயல-தா நம்பவைத்தார். இப்போது மின்துறை அமைச்சர் அடுத்த ஜூன் மாதம் வரை அதாவது ஆட்சிக்கு வந்து 25 மாதங்கள் கழிந்த பின்னர்தான் மின்வெட்டு தீரும் என்று பேசியுள்ளார். திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்ட மேட்டூர் 600 மெகாவாட் அலகு, வடசென்னை இரண்டாவது அலகு, வள்ளூர் ஆகியவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு, மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டதற்குப் பிறகும் மின்சார உற்பத்தியை ஆரம்பிக்காமல் தாமதம் ஏற்படுத்துவதற்கான காரணம் என்ன?  
இந்த கேள்விகளுக்கெல்லாம் அதிமுக ஆட்சியாளர்கள் ஒளிவு மறைவின்றி விடைகான வேண்டும்.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

ஓ.பன்னீர்செல்வம்: மின்வெட்டு ஒரு சிறிய பிரச்சினை!

முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வேண்டும். அப்போதுதான் காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்திற்கான உரிமை கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியும்.
எனவே புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அதற்காக அ.தி.மு.க.வினர் உழைக்க வேண்டும்.
ஒரு சிறிய பிரச்சினை உள்ளது. மின்வெட்டுபிரச்சினை. 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி செய்த மின்சாரத்தை வெளிநாட்டிற்கும் விற்பனை செய்தோம். அதன்பிறகு வந்த தி.மு.க. அரசு எந்த மின்உற்பத்தியையும் தொடங்கவில்லை. அப்படிங்களா உங்களை விட மக்களுக்கு ஞாபக சக்தி அதிகம் பன்னீரு .
தற்போது கூடுதலான மின் உற்பத்திக்கான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இன்னும் 6 மாதங்களுக்குள் மின்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வீரபாண்டி ஆறுமுகம்:போலீஸார் மீது வழக்குத் தொடுப்பேன்

 பழி வாங்கும் நோக்குடன் செயல்பட்ட சேலம் மாநகர போலீஸார் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சனிக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். அங்கம்மாள் காலனி குடிசைகள் எரிப்பு வழக்கில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 131 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை பகல் 1.25 மணியளவில் வீடு திரும்பினார்முன்னதாக வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வழி நெடுகிலும் ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொன்னாடை, மலர் மாலைகள் அணிவித்தும் வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் 100 கார்கள் புடைசூழ பூலாவரியில் உள்ள வீட்டுக்குச் சென்ற அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் கூறியது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், இப்போது நீதி வென்று நான் விடுதலையாகி உள்ளேன். என் மீது பொய் வழக்கு தொடர்ந்த சேலம் மாநகர போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனது வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் கிடைத்த உடன், கட்சி வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தி போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.

நடிகை அனன்யா வில்வித்தையில் தங்கம் வென்றார்

திருவனந்தபுரம்: மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் நடிகை அனன்யா தங்கம் வென்றுள்ளார்.  தமிழில் நாடோடிகள் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அனன்யா. 9ம் வகுப்பு முதல் வில்வித்தை போட்டியில் பங்கேற்க தொடங்கிய இவர் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போது மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  சினிமா நடிகையான பின்னர் வில்வித்தை போட்டியில் கலந்து கொள்வதை அனன்யா நிறுத்தி இருந்தார். 5 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சியில் நேற்று நடந்த மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் அவர் கலந்து கொண்டு காம்பவுண்ட் பிரிவு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதையடுத்து, இந்த ஆண்டு இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனன்யா தகுதி பெற்றுள்ளார்.

ஜி.கே.வாசன், கனிமொழி, அன்புமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டி!

சென்னை::தமிழ்நாட்டை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்கள் கனிமொழி (தி.மு.க.), ஞானதேசிகன் (காங்கிரஸ்), டி.ராஜா (கம்யூனிஸ்டு), திருச்சி சிவா (தி.மு.க.), மைத்ரேயன் (அ.தி.மு.க.), இளவரசன் (அ.தி.மு.க.) ஆகியோரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2013) ஜூலை மாதம் முடிவடைகிறது.
மத்திய மந்திரிகள் ஜி.கே. வாசன், ஜெயந்தி நடராஜன் (காங்கிரஸ்) மற்றும் பாலகங்கா (அ.தி.மு.க.) அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி (தி.மு.க.), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஆகியோரது பதவிக்காலம் 2014 ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.
பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரவும் வாய்ப்பு இருப்பதாக கருதுவதால் தேர்தலில் களம் இறங்கவும் இவர்களில் சிலர் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இதுவரை நேரடியாக தேர்தலில் போட்டியிடாத கனிமொழி, ஜி.கே. வாசன், அன்புமணி ஆகியோர் வருகிற தேர்தலில் களம் இறங்க முடிவு செய்துள்ளனர்.
கனிமொழி எம்.பி வெற்றி வாய்ப்புள்ள இரு தொகுதிகளை அலசி வருகிறார்.

விஜயகாந்த் பா.ஜ.,வுடன் கூட்டணி தகவல்கள் வெளியாகியுள்ளன.

லோக்சபா தேர்தலுக்கு, தே.மு.தி.க.,வை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில், தி.மு. க., - காங்.,
கட்சிகள் இறங்கியுள்ள நிலையில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, விஜயகாந்த் காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்தே, தி.மு.க., - காங்., கூட்டணியில் விரிசல் விழத் துவங்கியது."டெசோ' மாநாடு, சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு, எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம் என, மத்திய அரசுக்கு எதிராக, தி.மு.க., தலைமை தெரிவிக்கும் கருத்துக்கள், காங்கிரசை கழட்டி விட, அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகளாக பார்க்கப்படுகிறது.மேலும், அமைச்சரவை மாற்றத்தில் இடம்பெற மாட்டோம் என்று கூறி, காங்கிரஸ் மேலிடத்தின் அழைப்பையும், தி.மு.க., தலைமை நிராகரித்துள்ளது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்ற தகவல் கசிந்து வரும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளிலும், தி.மு.க., தலைமை இறங்கியுள்ளது.
காங்கிரசை, கழற்றிவிட்டு, தே.மு.தி. க.,வுடன் கைகோர்க்க, அக்கட்சி காய் நகர்த்தியது. லோக்சபா தேர்தலில், 12 சீட்கள் வரை தருவதாக, முக்கியப்புள்ளி ஒருவர் மூலம், விஜயகாந்திற்கு நெருக்கமானவருக்கும் அக்கட்சி தூது அனுப்பியது.