ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

cut and paste' &; 'copy and paste' கண்டு பிடிப்பின் தந்தை லாரி டெஸ்லர் மறைந்தார்

Jeevan Prasad : 'cut and paste' & 'copy and paste' கண்டு பிடிப்பின் தந்தை லாரி டெஸ்லர்
Larry Tesler, in a 1989 file photo. Tesler, who created the copy, cut and paste function for personal computers, passed away this week at the age of 74.'வெட்டி ஒட்டவும்' - 'நகலெடுத்து ஒட்டவும்' இன்று முடியாதிருந்தால் நாம் என்ன பாடு பட்டிருப்போம். அதைக் கண்டு பிடித்து நமக்கு தந்த மாகான் அண்மையில் இவ்வுலகை விட்டு மறைந்து விட்டார்.
கணினி பயன்பாட்டில், 'cut and paste' (வெட்டி ஒட்டவும்) மற்றும் 'copy and paste' (நகலெடுத்து ஒட்டவும்) என்ற சொற்கள் இன்றைய சமூகத்தில் தெரியாதோரே இல்லை எனலாம். அதைத்தான் உலகில் அநேகர் இலகுவாக பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் கட்டளை கணினிக்கு அதன் பயன்பாடு சிறிது காலம் கழித்தே வந்தது.
மேலே உள்ள விடயம் கட்டளைகளைக் கண்டுபிடிப்பதற்கும் கணினிகளின் பயன்பாட்டை எளிதாக்குவதற்கும் கணினிகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் உதவியது.
'Cut, copy மற்றும் paste' குறித்த இலக்கணத்தை கணணிக்குள் அறிமுகம் செய்த பிதா அண்மையில் காலமான லாரி டெஸ்லர்தான்.

அவர் இறக்கும் போது இவருக்கு வயது 74 . அவர் கணனி வரலாற்றின் ஆரம்ப நாட்களில் ஒரு முக்கியமான நபராகவும் இருந்தார்.
லாரி டெஸ்லர் 1960 களின் முற்பகுதியில் Silicon Valley என்ற நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார், அப்போது கணனிகள் கிட்டத்தட்ட உலகின் பெரும் பகுதிக்கு எட்டப்படாத காலமாக இருந்தது.
டெஸ்லர் 1945 இல் நியூயார்க்கின் பிராங்க்ஸில் பிறந்தார், கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பயின்றார்.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, கணினிகளைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதற்காக மென்பொருள் உருவாக்கத்தில் நிபுணத்துவம் பெற்றார்.
அவரது நீண்ட தொழில் வாழ்க்கையில், அவர் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றினார். Xerox Palo Alto Research Center எனும் ஆராய்ச்சி மையத்தை நிறுவினார். பின்னர் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் நிறுவனத்திற்கு பணியமர்த்தப்பட்டார், அங்கு அவர் தலைமை விஞ்ஞானியாகும் வரை 17 ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆப்பிளை விட்டு வெளியேறிய பிறகு, அவர் தனது கல்வியைத் தொடர்ந்தார், அமேசான் மற்றும் யாகூவில் சிறிது காலம் பணியாற்றினார்.
அவர் பணிபுரிந்த Xerox (ஜெராக்ஸ்) நிறுவனம் , அவர்களது ட்விட்டர் இரங்கல் செய்தியில், "cut, copy & paste "வெட்டு, நகல் மற்றும் பேஸ்ட் உருவாக்கியவரின் புரட்சிகர யோசனைகளுக்கு நன்றி, லாரி டெஸ்லர், உங்கள் பணி எம்மை எளிதாகிவிட்டது." என தெரிவித்துள்ளார்கள்.
லாரி டெஸ்லர் "வெட்டு", "நகல்" மற்றும் "ஒட்டுதல்" கட்டளைகளைக் கண்டு பிடிக்க, காகிதத்தில் அச்சிடப்பட்ட ஒன்றை வெட்டி வேறு இடத்தில் ஒட்டும் பழைய முறையை கணனியில் செயல்படுத்த எண்ணியதன் விளைவே அவரிடம் அந்த எண்ணத்தை தோற்றுவித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுவதாக சொல்கிறார்கள்.
இந்த கட்டளைகள் ஆப்பிள் மென்பொருளில் லிசா கணினி வழியாக இணைக்கப்பட்டன, இது 1983 இல் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இது Macintosh (மேகிண்டோஷிலும்) கணனியிலும் பயன்படுத்தப்பட்டது


கருத்துகள் இல்லை: