சனி, 29 பிப்ரவரி, 2020

தமிழகத்தில் வடநாட்டவர் ஆதிக்கம் எப்படி இப்படி?


Sivasankaran Saravanan : திராவிடர் கழக மாநாட்டில் வடநாட்டவர் இங்கே வந்து தொழில்களை கைப்பற்றுவது பற்றி குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து எழுதிய பதிவு:
வடநாட்டில் இருந்து இங்கே பிழைப்புக்காக வருபவர்கள் இரண்டு வகை.
1. கட்டிட , சாலை தொழிலாளர்கள் , உணவகங்கள் , அழகு நிலையங்கள் போன்றவற்றில் வேலை செய்யக்கூடியவர்கள். என்னைப்பொறுத்தவரை இவர்களால் எந்தவித பிரச்சினையுமில்லை. கடுமையான உழைப்பாளிகள். வட இந்தியாவின் மோசமான அரசியலால் பிழைப்பதற்கு கூட வழியின்றி இங்கே வருபவர்கள்.இவர்களுக்கு இது நிரந்தர மண்ணாக இருப்பதை விரும்பாதவர்கள்.
2. இரண்டாவதாக மார்வாடிகள் உள்ளிட்ட வடநாட்டு வணிகர்கள். இவர்கள் வந்து இங்கேயே ஆதார் கார்டு வாக்காளர் அட்டை வாங்கி குத்தவைத்து செட்டிலாகிவிடுபவர்கள்.
இவர்கள் வந்து தொழில் செய்வதிலோ , வீட்டு வாடகைகளை உயர்த்துவது கூட பிரச்சினையில்லை. ஆனால் வடநாட்டு ஹிந்துத்துவ அரசியலை இங்கே காலூன்ற நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவுவது தான் இவர்களிடம் உள்ள பிரச்சினை.

நான் வசிக்கும் பகுதியான சூளை மற்றும் வேப்பேரியில் நிறைய வட இந்திய , ஜெயின் மக்கள் இருப்பதால் அவர்களது செயல்பாடுகளை கவனிக்க முடிகிறது.
2014 தேர்தலுக்கு முன்பு அந்த கூட்டத்தில் பலர் மோதி வந்தால் மலைய தூக்கி மயிர் மேல வைப்பார் என கருத்துருவாக்கம் செய்தனர். அதே நபர்கள் டீமானிட்டைசேசன் சமயத்தின் போது இங்குள்ள தமிழர்களிடம் வந்து ரூபாய் நோட்டுகளை இவர்களின் வங்கிக்கணக்கில் போட்டு மாற்றித்தர சொன்ன கூத்துகளும் நடந்தன.
தமிழர் விரோத அரசியலுக்கு நிதியுதவி உட்பட பல்வேறு வகையில் இவர்கள் செயல்படுவது தமிழர்கள் இத்தனையாண்டுகாலம் கட்டிக்காத்துவரும் சமூகநீதி அரசியலுக்கு ஆபத்து தருகிற ஒன்றாகும். தங்களை வாழ வைக்கிற தமிழர்களுக்கு விரோதமாக நடந்துகொள்வதை நிறுத்திக்கொள்வது அவர்களுக்குமே கூட நல்லது.

கருத்துகள் இல்லை: