
பிப்ரவரி 25-ம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியா ட்ரம்புக்கும் விருந்து அளிக்கவுள்ளார். அந்த விருந்தில் ராம்நாத் கோவிந்த்தின் மனைவி சவிதா கோவிந்த்தும் பங்கேற்கிறார்.
இந்தநிலையில், அந்த விருந்தில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது. நாளை ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளார். இருப்பினும், ராம்நாத் கோவிந்த் விருந்தில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக