செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

pant-டைக் கழற்றி எனது மதத்தை கண்டு பிடிக்க போவதாக கூறினார்கள். ..பயந்துவிட்டேன். டெல்லி பத்திரிகையாளரின் நேரடி ...

Anindya Chattopadhyay : · Since birth I have never being
questioned about my religion in this grotesque manner "tu hindu hain ya muslim, pant kholun".?? my story today"s TOI..and thanks a ton to Sakshi Chand who protect me and told goons "isko aur camera ko chu ke dekh".
ஒரு பத்திரிக்கையாளரின் நேற்றைய கள அனுபவம்
மதியம் 12.30 மணியளவில் நான் Maujpur மெட்ரோ ஸ்டேஷனை அடைந்தேன். நான் இறங்கி சிறிது தூரம் நடந்துசெல்வதற்குள், என்னைக் குறுக்கிட்ட ஹிந்து சேனா உறுப்பினர் ஒருவர்...
"குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களது பணியை எளிதாக்கும்" என்றார்.
புகைப்பட கேமராக்களுடன் சென்ற என்னைப் பாத்தவுடன் அவருக்கு நான் ஒரு photo journolist என்பது புரிந்திருக்கும். அதன் காரணமாகவே அவர் அந்த குங்குமத்தை நீட்டுகிறார் என்பதை உணர்ந்துகொண்டேன்.
"நீங்க ஒரு ஹிந்துதான ? குங்குமம் வச்க்கிறதுல என்ன பிரச்சனை" என்றார் அந்த ஹிந்து சேனா உறுப்பினர்.
சுமார் 15 நிமிடங்களில், இரு தரப்பினர்கள், கல்வீசி தாக்கிக்கொண்டனர். மோடி மோடி என்ற பெருத்த கோஷங்களுக்கு நடுவே, கரும்புகை சூழ்ந்த மண்டலமாக அப்பகுதி மாறிக் கொண்டிருந்தது.
பற்றி எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டிடத்தை புகைப்படம் எடுப்பதற்காக, நான் விரைந்தபோது, அங்கிருந்த சிவன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த சிலர் என்னைத் தடுத்தார்கள்.

பிரபல பத்திரிகையின் புகைப்படக்காரன் என்று சொன்னபோதும், என்னை அனுமதிக்காத அவர்கள் "நீங்களும் ஹிந்துதான ? ஏன் அங்க போறீங்க ? ஹிந்துக்கள் இப்ப முழிச்சுக்கிட்டாங்க" என்றார்கள்.
நான் அங்கிருந்து பின்வாங்கி, வேறு வழியாக, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்தின் அருகே சென்று புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.
உடனே, கைகளில் இரும்புத் தடிகள் / மூங்கில் பிரம்புகளுடன் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டனர். என்னுடைய கேமராவைப் பறிக்க முயன்றனர். அங்கு என்னுடன் இருந்த, பத்திரிக்கையாளர் சாக்க்ஷி, என்னைக் காப்பாற்றினார்.
அப்போதைக்கு அங்கிருந்து நகர்ந்துசென்றாலும், நான் செல்லுமிடங்களுக்கெல்லாம் அவர்கள் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தார்கள் என்பது மிகவும் அச்சுறுத்தியது. .
சட்டென்று என்னை நிறுத்திய, அக்கும்பலை சேர்ந்த இளைஞன் ஒருவன் " ரொம்ப சாமர்த்தியமா நடக்குறன்னு நெனப்பா உனக்கு ? நீ ஹிந்துவா முசல்மானா?" என்றான்.
அது மட்டுமல்லாமல், நான் எந்த மதத்தை சேர்ந்தவன் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக என்னுடைய pant-டைக் கழற்றி சோதனையிடப் போவதாக கூறினார்கள். நிஜமாகவே பயந்துவிட்டேன்.
இரு கைகளால் அவர்களை கும்பிட்டு வணங்கி, "நான் ஒரு சாதாரண புகைப்படக்காரன் மட்டுமே" என்று மன்றாடினேன். அப்போதும், என்னை கடுமையாக மிரட்டிய பின்னரே அங்கிருந்து அனுப்பினார்கள்.
என்னுடைய அலுவலக வாகனம், நான் இருந்த பகுதியில் இருந்து மிகத் தொலைவில் இருந்ததால், நடந்தே சென்று ஒரு ஆட்டோவைப் பிடித்து விமான நிலையம் செல்லத் தொடங்கினேன்.
சில நொடிகளில், அந்த ஆட்டோவில் பெயர் என் கண்ணில் பட்டதும் அதிர்வடைன்தேன். அந்தப் பெயர் காரணமாக, நான் மீண்டும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படலாம் என்று யோசித்து முடிப்பதற்குள்ளாக, நான்கு பேர் கொண்ட கும்பல் , ஆட்டோவை நிறுத்தி என்னையும், ஓட்டுனரையும் சட்டைக் காலரைப் பிடித்து வெளியே இழுத்து போட்டது.
"நான் ஒரு பத்திரிகையாளன்" என்று அந்தக் கும்பலிடம் மன்றாடினேன். அந்த ஓட்டுனரும் அப்பாவி என்றேன். நாங்கள் இருவரும் அதிர்ச்சியில் உச்சத்தில் இருந்தோம்.
"என்னுடைய மதம் குறித்து யாரும் இப்படியொரு கொடூரமான முறையில்என்னிடம் விசாரித்ததில்லை" என்றார் ஓட்டுனர்.
என்னிடமும்.
-
அநிந்த்யா சட்டோபாதயாய்
புகைப்படக்காரர்
டைம்ஸ் ஆப் இந்தியா
நன்றி கோபி நாத்
நன்றி கவிதா சொர்ணவல்லி


Shahjahan R :ப; ஷாஹின்பாக் போராட்டம் அமைதியாக நடந்து வருவதே பாஜகவினரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்தது.
தில்லி தேர்தல் முடிவு வரட்டும், போட்டுத்தாக்கித் தூக்கிவிடலாம் என்று நினைத்திருந்தார்கள். அதை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் செய்தார்கள்.
தில்லி தேர்தல் முடிவுகளோ, ஆம் ஆத்மியே எதிர்பார்க்காத அளவுக்கு பெருத்த தோல்வியையும் ஏமாற்றத்தையும் பாஜகவுக்கு ஏற்படுத்தி விட்டன.
இந்த நிலைமையில் கிழக்கு தில்லியிலும் ஷாஹின்பாக் போலவே பெண்கள் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டதைப் பார்த்ததும் பாஜகவினரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் அமைதியான போராட்டம் என்பதெல்லாம் அவர்கள் அகராதியிலேயே இல்லை.
இப்படியே விட்டால் போராட்டம் அங்கங்கே பரவிவிடலாம். இதைத்தடுக்க ஒரேவழி வன்முறையைப் பிரயோகிப்பது என்பதே. தில்லி போலீஸ் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்பதும் அவர்கள் நன்கு அறிந்ததே. ஜேஎன்யு, ஜாமியா போராட்டங்களிலும் தில்லி போலீஸ் அப்பாவிகளை அடித்து, கலவரக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்தது.
அதே மாடலைத்தான் கிழக்கு தில்லியிலும் நடத்திக்காட்டியிருக்கிறார்கள்.
முதல்வர்-அமித்ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ராணுவத்தை அனுப்ப முடியாது என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. தில்லி போலீஸ் ஒருபட்சமாகவே இருக்கும் என்பது அப்பட்டமாகத் தெரிந்த உண்மை.
(குஜராத்திலும் ராணுவத்தை இறக்க திட்டமிட்டே கால அவகாசம் எடுத்துக்கொண்டார்கள் என்பது வரலாறு.)
பெரும்பாலான ஊடகங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கின்றன. அங்கே தைரியமாகச் செல்லும் மிகச்சில ஊடகங்கள் மீது, தாக்குதல் நடத்தப்படுகிறது. இப்போது டிரம்ப் போய்விட்ட நிலைமையில், ஊடகங்கள் முற்றிலும் தடுக்கப்படலாம்.
இனியும் கலவரம் தொடருமானால், இருப்பது ஒரே வழிதான்.
எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றாகக்கூடி குடியரசுத் தலைவரை சந்திப்பது. பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்பியாக வேண்டும் என்று வலியுறுத்துவது. போராட்டம் நடத்துவது. ஏற்கெனவே ஷாஹின்பாக் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், இதற்கும் சேர்த்து நீதிமன்றக் கதவைத்தட்டுவது.
நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து போராட்டத்தை ஆரம்பிப்பது.
இல்லையேல், இன்னொரு குஜராத் தில்லியில் அரங்கேறக்கூடும்.

கருத்துகள் இல்லை: