செவ்வாய், 24 நவம்பர், 2020

எக்கச்சக்கமான இன்பங்களை (?) தரும் கணவனை எப்போதும் பூஜிக்கவேண்டும்! அபரிமிதமான ஸுகங்களைத் தரும் பர்தாவையே எப்பொழுதும் பூஜை பண்ண வேண்டும்.


Dhinakaran Chelliah
: 40.எந்த ஸ்த்ரீ தனது புருஷன் அடித்தானானால்
அவனைத் திரும்பவும் அடிக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறாளோ அவள் புலியாகவோ, காட்டுப் பூனையாகவோ பிறக்கிறாள். எவள் பரபுருஷனைக் கடைக் கண்ணில் வைத்தும் பார்க்கிறாளோ, அவள் மாறு கண்களுடன் அவலக்ஷணமமாகப் பிறக்கிறாள்.
41.எந்த நாரீ புருஷனை விட்டுவிட்டு ருசியான
உணவை உண்கிறாளோ அவள் கிராமப்பன்னியாகவோ, அல்லது தனது மலத்தைத் தானே தின்னும் வௌவாலாகப்
பிறக்கிறாள்.
42.எவள் தன் பர்த்தாவை நீ நான் என்று அலட்சியம் செய்கிறாளோ அவள் ஊமையாகக் பிறக்கிறாள். யார் தன் சக்களத்தியிடம் பொறாமைப்படுகிறாளோ, அவள்
அடிக்கடி துர்பாக்யவதியாகிறாள்.
43.எவள் பதியின் கண்களை ஏமாற்றிவிட்டு
பரபுருஷனை நோக்குகிறாளோ அவள் மறு ஜன்மாவில், அவலக்ஷணமுள்ளவளாயும் ஆகிறாள்.  எக்கச்சக்கமான இன்பங்களை தரும் கணவனை எப்போதும் பூஜிக்கவேண்டும்   part 1
44.எவள் தன் பதி வெளியில் சென்று வந்தவுடன் ஜலம், ஆசனம், தாம்பூலம், விசிறி இவைகளால் சைத்யோபசாரம் செய்து, கால்களைப் பிடித்துவிட்டு வருத்தத்தைப் போக்கும் இனிமை வசனங்களைக் கூறுகிறாளோ அவள் மூன்று லோகங்களையும் ஸந்தோஷப் படுத்துகிறவளாகிறாள்.
45,46.பிதா, புத்ரன் இவர்களெல்லாம் ஒரு
எல்லைவரை தான் ஸ்த்ரீகளுக்கு ஸுகம் தரமுடியும். அதனால் அபரிமிதமான ஸுகங்களைத் தரும் பர்தாவையே
எப்பொழுதும் பூஜை பண்ண வேண்டும்.
47.புருஷன் கெட்டகாலத்தையடைந்திருந்த போதும் நோய்வாய்பட்டவனாக இருந்தாலும் எப்படியிருந்தாலும் ஸ்த்ரீ ஒரு பொழுதும் உல்லங்கனம் செய்யலாகாது.
தரித்ரன் ஆனாலும் தீயவனானாலும், அலட்சியம் செய்யக் கூடாது. ஸ்வாமி ஸந்தோஷமாக இருந்தால் இவளும்
ஸந்தோஷத்தைப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவர் துக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும். ஸதி ரமணி ஸந்தோஷத்திலும் துக்கத்திலும் ஒன்று போலிருக்க வேண்டும்.
48.ஜீவன் பிரிந்ததும் உடல் எப்படி அசுத்தமாகிறதோ அதுபோல் பர்த்தா இல்லாத ஸ்த்ரீ ஸ்நானம் செய்தாலும் அசுத்தமானவளே.
49.உலகத்தில் எல்லா அமங்களங்களையும்
விடபூர்த்திகரித்த அமங்களம் விதவாஸ்த்ரீயே, ஒரு காரியம் ஆரம்பிக்குமுன் ஒரு விதவைஸ்த்ரீயைப் பார்த்தால் அந்தக்
கார்யம் எங்கு நடந்தாலும் ஸித்தியாகாது.
50.பண்டிதர்கள் தனது தாய் அமங்களவதியானாலும்
அவளை வணங்கலாமே தவிர வேறு எந்த
விதவாஸ்த்ரீகளுடைய ஆசிர்வாதங்களையும் பாம்பைத் தவிர்ப்பது போல் தவிர்க்க வேண்டும்.
51.ப்ராம்மணர்கள் கன்னிகைகளுக்கு விவாஹம் செய்யும் பொழுது இந்த மந்திரத்தைத்தான் ஓதுகிறார்கள்
அதாவது பதி உயிருடன் இருந்தாலும் இறந்தாலும் அவருக்கு ஸஹதர்மிணியாக இரு என்பது.
52.எவ்விதம் தேகத்தை நிழல் பின்பற்றுகிறதோ, சந்திரனை நிலவு தொடருகிறதோ மின்னல் மேகத்தில்
எவ்விதம் இருக்கிறதோ அதுபோல் ஸதி எப்பொழுதும் பதியைப் பின்பற்ற வேண்டும்.
53.எந்தப் பெண் பதியுடன் ஸஹமரணம்
செய்யும்பொருட்டு அதாவது ஸதியாக விரும்பி
ஸந்தோஷமாக வீட்டிலிருந்து ஸ்மசானம் வரையில் பின்பற்றுகிறாளோ அவளுடைய ஒவ்வொரு அடி வைப்பிலும் அசுவமேத யாகத்தின் பலன் கிடைக்கிறது.
54.எப்படிப் பாம்புபிடாரன் பலவந்தமாகப் பாம்பை வளையிலிருந்து வெளியில் இழுக்கிறானோ அதுபோல் ஸதி
யமராஜருடைய தூதர்களிடம் இருந்து பிடுங்கி
ப்ராணநாதனை ஸ்வர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறாள்.
55.யமகிங்கரஜனங்கள் ஸதியைப் பார்த்தவுடன்
அந்தக் கணவன் கோரமான பாபம் செய்திருந்தாலும் விட்டுவிட்டு தூர விலகிவிடுவார்கள்.
56.நாங்கள் யமதூதர்கள் பதிவ்ரதாஸ்திரீகளைப் பார்த்து விட்டு எப்படி பயப்படுகிறோமோ அதுபோல் அக்னிக்கும், மின்னலுக்கு கூட பயப்பட மாட்டோம் என்று
யமதூதர்கள் கூறுகிறார்கள்.
57.பதிவ்ரதையின் தேஜஸைக் கண்டுவிட்டு
ஸூர்யனும் அக்னியும் கூடத் தவிக்கத் தொடங்குகிறார்கள். அவளுக்கு முன்னால் எந்த ப்ரகாசமும் நடுங்குகிறது.
58.பதிவ்ரதை தன் தேஹத்தில் எத்தனை ரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை வருஷகாலம் (ஆயிரமகோடி)
வர்ஷங்கள் வரைபதியுடன் ஸ்வர்க்கத்தில் ஸுகபோகம் அனுபவிக்கிறாள்.
59.எவ்வீட்டில் ஸதியிருக்கிறாளோ அவ்வீட்டு மாதா, பிதா,பதி எல்லாரும் தன்யர்கள்.
60.பிதாவின் வம்சத்திலும், மாதாவின் வம்சத்திலும் பூர்வ மூன்று மூன்று புருஷர்கள் ஸதியின் புண்ணிய பலத்தினால் ஸவர்க்க போகத்தையனுபவிக்கிறார்கள்.
61.கெட்ட குணத்தையும் நாரீ தன் மாதா, பிதா, பதி இம்மூவருடைய குலத்தையும் தனது தீய குணத்தினால் பதிதமாக்குகிறாள். அவளும் இஹ, பரலோகங்களில் துக்கமே அனுபவிக்கிறாள்.
62.பூமியில் எங்கெங்கு பதிவ்ரதையின் பதச்
சின்னங்கள் படுகின்றனவோ அங்கங்கு பூமிமாதா தன்னைப் பவித்ரமாகவும் பாபரஹிதமாகவும் எண்ணுகிறாள்.
63.சூர்ய சந்திர வாயுக்கள் கூடப் பயந்து பயந்துத் தங்களை பவித்ரமாக்கிக் கொள்வதற்காக ஸ்பர்சிக்கிறார்கள்.
வேறு பிரயோஜனத்திற்காக வல்ல.
64.ஜலமும் எப்பொழுதும் பதிவ்ரதையின் உடம்பை ஸ்பர்சிக்க இச்சிக்கிறது. எதற்காக என்றால் இன்று நமது ஜடத்தன்மை விலகிவிட்டது. நாமும் மற்றொருவரை
தூய்மையாக்க அருகதையாகி விட்டோம் என்று.
65.ரூப லாவண்யத்னால் கர்வப்படும் பெண்கள்
வீட்டிற்கு வீடு இருக்கிறார்கள். ஆனால் பதிவ்ரதையான நாரீ விஸ்வேஸ்வரருடைய பக்தியினாலேதான் கிடைப்பாள்.
66.மனைவியே க்ருஹஸ்தாசிரமத்தின் வேர். எல்லா ஸுகத்திற்கு மூலமும் அவளே. எல்லாப் பலன்களும் ஒருவனுக்குக் கிடைக்க
மூலகாரணம் மனைவிதான்.
பார்யையினால்தான் வம்ச
விருத்தியேற்படுகிறது.
67.ஒரு மனைவியின் ஸஹாயத்தினால்தான் ஒருவன் இஹலோகம் பரலோகம் இரண்டையும் ஜயிக்கிறான், ஏனென்றால் பார்வையில்லாதவன் தேவகார்யம்,
பித்ருகார்யம் அதிதிஸத்காரம், மேலும் அநேக
ஸத்காரியங்கள் இவைகள் செய்வதற்கு அருகதையாக மாட்டாள். அதிகாரியாக மாட்டாள்.
68.எவனுடைய வீட்டில் பதிவ்ரதா நாரீ
இருக்கிறாளோ அவனே உண்மையான க்ருஹஸ்தன். இல்லாவிட்டால் மற்றொரு ஸ்திரீயானால் ராக்ஷஸிபோல்
பதியை பதத்திற்குப் பதம் விழுங்குபவள்.
69.கங்காஸ்நானம் செய்வதினால் எப்படி தேஹம் பவித்ரமாகிறதோ அதுபோல் பதிவ்ரதையின் சுபத்ருஷ்டிபட்டால் தேஹம் பவித்ரமாகிறது.
70.ஸ்த்ரீ ஏதோ தெய்வகாரணத்தினால் பதியுடன் ஸதியாக முடியாவிட்டால்கூட சுத்தரீதியாகத் தனது சீலத்தை அவள் பாதுகாக்க வேண்டும். அவள் சீலம்
நஷ்டமடைந்துவிட்டால் அவள் பரமபதிதையாகிறாள்,அவள் தான் மட்டும் பதிதையாவதில்லை, அவளுடைய
மாதா, பிதா, பதி, ஸகோதரவர்க்கம், பந்துவர்க்கம் எல்லோரும் ஸ்வர்க்கத்திலிருந்து விழுகிறார்கள். இதற்கு ஸந்தேஹமேயில்லை.
71. அதனால் பதி இறந்தபிறகு எந்த ஸ்திரீ யதாரீதியாக வைதவ்ய வ்ரதத்தை யனுஷ்டிக்கிறாளோ அவள் திரும்பவும் ஸ்வர்க்க லோகத்தில் தன் பதியுடன் ஸுகபோகம் அனுபவிக்கிறாள்.
72.விதவை தலீவாரி முடிந்தால் பர்த்தாவிற்கு
பந்தனம் ஏற்படும், அதனால் ஸ்த்ரீகள்
விதவையாகிவிட்டால் தலீ முண்டனம் செய்து கொள்ள வேண்டும்.
73.விதவை பகலும் இரவுமாக ஒரு நேரம்தான்
போஜனம் செய்யவேண்டும். இரண்டு வேளையும் ஒரு பொழுதும் போஜனம் செய்யக்கூடாது. விதவாஸ்த்ரீகள் மூன்று இரவுகள், பஞ்சராத்ரி பக்ஷவிரதம்.
74.மாஸோபவாஸம், சாந்த்ராயணம், ப்ராஜாபத்யம்,பராகம், தநுக்ருச்ரம் இந்த விரதங்களைச் செய்து
கொண்டிருக்கவேண்டும்.
75.எதுவரை ப்ராணன் தன்னைத் தானே
போகவில்லீயோ அதுவரை ஜவதான்யம், அல்லது பால் மட்டிலும் அருந்தி வாழ்வாகிய ப்ரயாணத்தை நிர்வஹிக்க வேண்டும்.
76.கட்டிலில் படுத்துறங்கும் விதவை பதியைப்
பதிதனாக்குகிறாள் . அதனால் பதிக்கு ஸுகத்தை விரும்புகிறவள் தரையில் படுத்துறங்க வேண்டும்.
77.விதவை சரீரத்தில் எண்ணையோ வேறு எந்த
ஸுகந்த பதார்த்தங்களையோ
தேய்க்கக்கூடாது.
78.அவள் ப்ரதி தினமும் அவளுடைய பதி, பிதா ,
பிதாமஹர் அவர்களுடைய நாம கோத்ரங்களைக் கூறி தர்ப்பை எள்ளு முதலியவைகளால் தர்பணம் செய்யவேண்டும்.
79.பிறகு விஷ்ணு பகவானிற்குப் பூஜை செய்ய
வேண்டும், விஷ்ணு ரூபஹரியைப் பதிதேவன் என்று எண்ணி த்யானம் செய்ய வேண்டும்.
80.உலகில் தனக்கு எந்தெந்த வஸ்து ப்ரியமோ, தனது பதி எதை விரும்புவானோ அவைகளையெல்லாம் பதிக்கு ப்ரீதியாக குணவான்களான பிராம்மணர்களுக்கு தானம்
செய்யவேண்டும்.
81.விதவா நாரீ வைசாகம், கார்த்திகை, மாசி இந்த மாதங்களில் சில விசேஷ நியமங்களை அனுஷ்டிக்க வேண்டும். அதாவது ஸ்நானம், தானம், தீர்த்த யாத்திரை இவைகளைச் செய்ய வேண்டும்.
82.வைசாகத்தில் ஜலம் நிரம்பிய குடம் தானம் செய்ய வேண்டும், கார்த்திகை மாதத்தில் தேவாலயத்தில் நெய் தீபம் போடவேண்டும்; மாக மாதத்தில் தான்யம் எள்
முதலியவைகளைத் தானம் செய்தால் ஸ்வர்கத்தில் விசேஷஸுகம் ஏற்படும்.
83.விதவாஸ்த்ரீ வைசாக மாதத்தில் தண்ணீர் பந்தல் தேவதைகளுக்கு ஜலதாரை விசிறி, குடை, மெல்லிய வஸ்த்ரம் சந்தனம்,
84.கற்பூரத்துடன் கூடிய தாம்பூலம் புஷ்பம்,
விதவிதமான ஜல பாத்ரம், புஷ்ப மண்டபம்,
85.குடிப்பதற்கு ரஸம் நிரம்பிய ஜல பதார்த்தம்,
திராக்ஷை, வாழைப்பழம் முதலிய இதர பழங்கள் இவைகளைத் தன்னுடைய பிராணபதி ஸந்தோஷமாக இருக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு பிராமணர்களுக்கு தானம் செய்ய வேண்டும். கார்த்திகை
மாதம் ஒருவேளைதான் சாப்பிட வேண்டும், கத்திரிக்காய்,சேனைக்கிழங்கு அவரை முதலிய காய்கறிகளைச் சாப்பிடக் கூடாது.
86.கார்த்திகை மாதம் எண்ணை, மது இவை
உபயோகப்படுத்தக் கூடாது. பீங்கான் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது. கார்த்திகை மாதம் ஊறுகாய் சாப்பிடக் கூடாது.
87.கார்த்திகை மாதம் மௌன விரதம் அனுஷ்டிக்க வேண்டும், மணிதானம் செய்யவேண்டும். ஒருவர் இலையில் உண்பவரானால் அவருக்கு நெய் நிரம்பிய
வெண்கலப் பாத்திரம் தானம் செய்ய வேண்டும்.
88.பூமியில் படுத்துத் தூங்கும் விரதம்
எடுத்துக்கொண்டால் ம்ருதுவான மெத்தை ஸஹிதம் படுக்கை தானம் செய்ய வேண்டும். பழத்தை விடுவதாக இருந்தால் நல்ல வகை பழ தானங்கள்;
89.ருசியான பான பதார்த்தங்கள் சாப்பிடுவதை
விடுவதாக இருந்தால் அவைகளை தானம் செய்ய வேண்டும்.
90.அப்படி தான்யங்களை தானம் செய்வதாக
இருந்தால் அரிசி தானம் செய்ய வேண்டும். பிறகு மிகவும் சிரத்தையுடன் தங்கத்தினால் அலங்கரிக்கப்பட்ட பசு தானம் செய்ய வேண்டும். இவை ஒருபுறம்
91.மறுபுறம் தீபதானம், கார்த்திகை மாதம் எந்த
தானமும் தீப தானத்திற்குப் பதினாறில் ஒரு பங்கு கூட ஆகாது.
92.சூர்யோதயத்திலேயே மாகஸ்நானம் பண்ண
வேண்டும், மாகஸ்நானத்திற்குக் கூறிய எல்லா
விதிகளையும் அனுஷ்டிக்க வேண்டும்.
93.ப்ராம்மணன் சந்யாஸி, தபஸ்வி, இவர்களுக்கு சித்ரான்னங்கள், லட்டு, சேமியா கேஸரி, வடை, இண்டரி
(போஜனம் செய்யும்போது தபஸ்விகள் நூலால் செய்த மெதுவான ஆசனம் போன்ற ஒன்றை தலையில் வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள்) இவைகள்
94.நெய்யினால் செய்யப்பட்ட மரீசம் என்னும் ஒரு வகை பண்டத்தினால் நிரம்பிய சுத்த கற்பூரத்தினால் வாசனையூட்டி, அதன் மத்தியில் சர்க்கரையை நிரப்பிக் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், வாசனையுடன் கூடினதுமான பதார்த்தத்தை போஜனம் செய்விக்க
வேண்டும்.
95.குளிர் காலத்தில் உலர்ந்த விறகுக் கட்டுகள், பஞ்சு வைத்து தைத்த சட்டைகள், துப்பட்டாக்கள் மெத்தைகள்,
96.மஞ்சளில் நனைத்த ஸுந்தர வஸ்த்ரங்கள், பஞ்சு நிரம்பிய ரஜாய், ஜாதிபத்ரி லவங்கத்துடன் கூடிய தாம்பூலம்.
97.விசித்ரமான கம்பளங்கள், காற்றில்லாத
அறைகள், ம்ருதுவான மோஜாக்கள், ஸுகந்நமான ஸ்நானப் பொடி.
98.பிறகு மஹாஸ்நான விதிப்படி (பதரீ
நாராயணத்தில் பிரசித்தமான நெய்யில் நனைத்த கம்பளம்) பூஜையுடன் கூட காரகில் முதலியவைகளால் தேவாலயங்களுக்குள்ளே தூபதானம்.
99.பருமனான திரியுடன்கூட தீபதானம், விதவிதமான நைவேத்யங்கள் இவைகளால் பதிரூபமான பகவான் ஸந்தோஷமடையட்டுமென்று;
புராணங்கள் வாயிலாக ஒரு வைதிக ஸ்த்ரீ எவ்வாறு கட்டமைக்கப் படுகிறாள் என்பதற்கு மேலுள்ள ஸ்கந்த புராண ஸ்லோகங்களே உதாரணம்.
இன்னும் வரும்.....

கருத்துகள் இல்லை: