வியாழன், 26 நவம்பர், 2020

சென்னையில் கடுங்குளிர்.. என்ன காரணம்?.. சட்டென்று மாறிய வானிலை .. வெதர்மேனின் பிரத்யேக தகவல்

Vishnupriya R -  tamil.oneindia.com:  சென்னை: சென்னையில் நிவர் புயல் கரையை கடந்த நிலையில் கடுங்குளிர் வீசுகிறது. 

புயலை நமக்கு வெகு அருகில் இருப்பதால் இந்த நிலை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.                    வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை புதுவை அருகே கரையை கடந்தது. இதனால் நேற்று முதல் சென்னையில் மழை வெளுத்தெடுத்தது.                     மழை பெய்த போது குளிர்ந்த காற்று வீசினாலும் ஜில்லென இல்லை.                 ஆனால் இன்று நிவர் கரையை கடந்த நிலையில் காலை முதல் சென்னையில் மழை பல்வேறு இடங்களில் இல்லை. வானமும் வெளீர் என இருந்தது.                    இந்த நிலையில் மதியம் முதல் குளிர் வாட்டி எடுக்கிறது. ஏதோ மலை பிரதேசங்களில் இருப்பது போன்ற ஒரு எண்ணம் தோன்றுகிறது.          வாவ்.. சென்னை பக்கிங்காம் கால்வாயில் அரிதான சிறிய சூறாவளி.. வீடியோ வெளியிட்ட வெதர்மேன் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவலில், நிவர் புயலானது நம்மை வெகு விரைவில் கடந்து சென்றதால் அதிகமான குளிர் ஏற்பட்டுள்ளது.

  கடந்த 2018ஆம் ஆண்டு பெய்ட்டி புயல் ஆந்திரா அருகே கரையை கடந்த போதும் கூட இது போன்று ஒரு கடுங்குளிர் நிலவியது. குளிர்ந்த வெளிப்புற காற்று சென்னையில் வீசுகிறது. அதனால் இந்த குளிர் நிலவுகிறது. நிவர் புயலானது சென்னைக்கு வடக்கே உள்ளது. அதாவது ஆந்திரா அருகே உள்ளது

கருத்துகள் இல்லை: