சனி, 28 நவம்பர், 2020

குளத்தில் மூழ்கிய வாலிபரை காப்பாற்ற உதவிய தெருநாய்

 குளத்தில் மூழ்கிய வாலிபரை காப்பாற்ற உதவிய தெருநாய்

maalaimalar :பாலக்காடு:  வாயில்லா ஜீவனாக சுற்றித்திரியும் நாய்கள் நன்றி உணர்வு மிக்கது. தனக்கு உணவளிக்கும் எஜமானியரின் கட்டளைக்கு கீழ்படிந்து வீட்டுக்கு நல்ல காவலாளியாக இருப்பவை.

இந்த வகையில் வீட்டு நாய்கள் மட்டுமின்றி, தெருநாய்களும் தங்களது பகுதிக்கு சந்தேகப்படும்படியான வெளி நபர்கள் யாரும் வந்தால் விடாமல் குரைத்து அந்த வீதியில் உள்ளவர்களை விழிப்படைய வைக்கும். ஆகவே நாய்களும் மக்களுக்கு உதவிகரமாகவே உள்ளன. இந்த வகையில் தெரு நாய் ஒன்று குளத்தில் உயிருக்கு போராடிய ஒரு வாலிபரை காப்பாற்ற உதவிய சம்பவம் நடந்துள்ளது. அது பற்றி பார்க்கலாம்:-   
கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோன் (வயது 24). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.                     இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் நிறுவனத்துக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடுதிரும்பினார். அப்போது திடீரென நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள குளத்தில் விழுந்தார். இதனால் ஜோன் மயங்கிய நிலையில் குளத்தில் மூழ்கதொடங்கினார்.



இதனை பார்த்து அந்த பகுதியில் இருந்த ஒரு தெருநாய் குரைக்க தொடங்கியது. நாய் குளத்தை நோக்கி விடாமல் குரைக்க தொடங்கியதால் அந்த பகுதி வழியாக வாகனத்தில் வந்தவர்கள் குளத்தில் என்ன இருக்கிறது என்று எட்டிபார்த்தனர். அப்போது குளத்துக்குள் ஆபத்தான நிலையில் மூழ்கிக்கொண்டிருந்த ஜோனை பார்த்தனர். உடனே அவரை குளத்தில் இறங்கி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோன் உயிர் பிழைக்க காரணம் அந்த பகுதியில் குரைத்த தெருநாய் என்பதால், அந்த நாயை அப்பகுதி மக்கள் பார்த்து செல்கின்றனர்.

மேலும் அந்த நாய்தான் வாலிபரின் உயிரைகாப்பாற்றியது என்று அந்தநாய்க்கு, வாலிபரின் உறவினர்கள் அதற்கு பிஸ்கெட் வழங்கினர்.

கருத்துகள் இல்லை: