

Samayam Tamil : 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இந்துத்துவ அமைப்புகளால் இடிக்கப்பட்டது. பாபர் மசூயை இடிக்க, டிசம்பர் 5ஆம் தேதியே ஒத்திகை நடந்தது தெரியுமா?
1992 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து 17 ஆண்டுகள் விசாரித்து தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில், “இந்துத்துவ உணர்வாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்தனர் என்று, வலதுசாரி அமைப்புகள் சொல்லி வந்த வேளையில், பாபர் மசூதி இடிப்புக்கு , முன்னதாகவே ஒரு ஒத்திகையும் பார்க்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை உறுதி செய்யும் விதமாக அந்த ஒத்திகையை படம் பிடித்த ஒரு ஆங்கில பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் ப்ரவீன் ஜெய்ன் இதற்கான ஆதாரங்களை வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து பிரவீன் ஜெய்ன் (நேரடியாக புகைப்படம் எடுத்தவர்) தெரிவித்ததாவது “ டிசம்பர் 4 ஆம் தேதி நான் அயோத்தி சென்றேன். 5 ஆம் தேதி மசூதியை இடிக்க ஒத்திகை நடக்கப்போவதாக அப்போது எனக்கு தெரியாது. லட்சக்கணக்கான இந்துத்துவத் தொண்டர்கள் இருந்தனர்.
மசூதியைத் தொடமாட்டோம் என வாக்கு அளித்திருந்தனர். ஆனால், நாளை (டிச 5) பாபர் மசூதியை இடித்து ஒத்திகை பார்க்கப்போவதாக எனக்குத் தெரிந்த ஒரு எம். பி சொன்னார்.
நான் அவர்களைப் போலவே வேடமிட்டுக்கொண்டு அவர்களுடன் சென்றேன். அவர்களைப் போலவே கோஷம் போட்டுக் கொண்டேன்.


கத்தி கோஷமிட்டு மசூதியை இடிக்க தயாரான அவர்களை படமெடுத்த ஒரே பத்திரிகையாளன் என்ற சிலிர்ப்பில் வெளியே வந்தேன் என்று பிரவீன் ஜெய்ன் தெரிவித்திருந்தார்.

அடுத்த 4 மணி நேரத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தை படம்பிடிக்க பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ப்ரவீன் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒத்திகை செய்து நடத்தப்பட்டதுதான் பாபர் மசூதி இடிப்பு என்பதற்கு தற்போது வரையிலும் ப்ரவீன் ஜெய்ன் சாட்சியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அயோத்தி வழக்கு தீர்ப்பு: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
; அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் இது குறித்து முக்கிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.</ அயோத்தி வழக்கு தீர்ப்பு: தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?
அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மசூதி கட்டிக் கொள்ள இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும். வக்பு வாரியம் ஏற்கும் இடத்தில் நிலம் தர மத்திய அரசுக்கும் உத்தரப்பிரதேச அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக