

இது மிகவும் கடுமையான காற்று மாசு என்றும், சுவாசிக்க உகந்த காற்றே அல்ல என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், தலைவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு டெல்லி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனிடையே கடுமையாக காற்று மாசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
வாகன போக்குவரத்தால் ஏற்படும் மாசை குறைக்க
ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகன போக்குவரத்து முறை அமல்படுத்தப்பட உள்ளது.
டெல்லி விமான நிலையத்தை காற்றுமாசு சூழ்ந்துள்ளதால் 30க்கும் மேற்பட்ட
விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. அதேபோல்
இன்று இந்தியா வங்கதேசம் இடையே நடைபெறும் 20 ஓவர் போட்டி இன்னும் சற்று
நேரத்தில் தொடங்கவிருக்கும் நிலையில் போட்டி முழுமையாக நடைபெறுமா
என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக