சனி, 9 நவம்பர், 2019

BBC : அயோத்தி உச்ச நீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.. ஒரே பார்வையில்

பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி நிலத் தகராறு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகி இருக்கிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு சரியாக காலை 10:30 மணிக்கு தீர்ப்பை வாசிக்க தொடங்கியது.
ராம் லல்லா, நிர்மோஹி அகாரா மற்றும் சுன்னி வக்ஃபு வாரியம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் என்ன?

  • 10. 30 மணிக்கு தலைமைந் நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். தீர்ப்பை வாசிக்க 30 நிமிடங்கள் ஆகும் என்று அவர் கூறினார்.
  • ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பு இல்லை.
  • ராம் லல்லா சட்டப்படியான நபர் என்பது ஏற்பு.
  • ;
    • நிலம் தொடர்பாக இருக்கும் தொல்லியல் துறை அறிக்கையை புறக்கணிக்க முடியாது.
    • மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுமையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.
    • இந்துக்கள் சார்பில் நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய இரு தரப்புகள் உரிமை கோரியிருந்தனர். இவர்களில் நிர்மோஹி அகாராவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ராம் லல்லாவுக்கு சர்ச்சைக்குரிய இடத்தின் முழு உரிமையும் வழங்கப்படுகிறது.
    • பாபர் மசூதி வெற்று இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு முன்பே ஒரு கட்டுமானம் இருந்துள்ளது. அது இஸ்லாமிய கட்டுமானம் இல்லை.
    • அயோத்தி ராமர் பிறந்த இடமென வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
    • பயணிகளின் ஆவணங்களை உள்ளாய்வு செய்ய வேண்டும். பயணிகள் பார்த்ததை, அவதானித்ததை எச்சரிக்கையுடன்தான் அணுகி ஒரு முடிவுக்கு வர முடியும்.
    • நம்பிக்கையின் அடிப்படையில் இடத்தின் உரிமையாளர் யார் என்பதை அணுக முடியாது. சட்டத்தின் அடிப்படையிலேயே அணுக முடியும்.
    • தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.
    • உள்முற்றம் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது என்பது மிகவும் முக்கியம்.
    • 1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் அளிக்கவில்லை.
    • மத்திய அரசோ அல்லது மாநில அரசோதான் அயோத்தியில் இடத்தை ஒதுக்க முடியும்.
    • சுன்னி வக்ஃபு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை அயோத்தியிலேயே அளிக்க வேண்டும்.
    • கோயில் கட்டுவதற்கு 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும்.
    • உள் முற்றம் மற்றும் வெளி முற்றம் அமைந்துள்ள இடத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: