திங்கள், 9 செப்டம்பர், 2019

முத்தையா முரளிதரன் : புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள்

athavannews.com விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது
வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் என்றும் முரளிதரன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே ஆட்சிசெய்ய வேண்டும் எனவும் கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர். ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்கக் கூடிய ஒருவராலேயே தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவருக்கு மக்கள் வாக்களிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான தலைவர் முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குவார் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப்புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர் எனவும் முத்தையா அவர் கூறினார்.
2009இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் எனவும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும், அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம் என்றும் 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்டு எனது தந்தை தாக்கப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அனைவரும் இந்தியாவுக்கு சென்றனர். ஆனால் நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இங்கு வாழ விரும்பினோம். நான் இலங்கையன். இரு தரப்பும் தவறிழைத்தன. ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது. பின்னர் விடுதலைப் புலிகள் தவறிழைத்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: