செவ்வாய், 10 செப்டம்பர், 2019

தமிழ்மொழி சொற்களின் வரலாற்று அகழாய்வுகள் முறையாக மேற்கொள்ளப்படவேண்டும்!


தமிழ் மொழிக்குள் இன்னும் பெரிய அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை!
ஒவ்வொரு மொழியின் சொற்களுக்குள்ளும்  ஒரு பெரிய வரலாறு புதைந்து கிடக்கிறது!
சொற்கள் என்பது வெறும் சத்தங்களின் கூட்டமல்ல. அவை  பல  முக்கிய கருத்து பொருட்களை கொண்டிருக்கிறது.
அது குறிப்பிடும் பொருளின் அர்த்தங்கள் பல காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே இருக்கும்.
பல சொற்கள் இன்று எந்த கருத்தை உள்ளடக்கி இருக்கிறது என்ற விபரமே இன்று காணாமல் போயிருக்கிறது.
அப்படி காணாமல் போன செய்திகளை அந்த சொற்களின் சரித்திரத்தை ஆழமாக ஆய்ந்து பார்த்தால் அந்த மொழி பேசிய மக்களின் மறைந்து போன வரலாற்றை கண்டு பிடிக்கலாம்!
தமிழின் பல சொற்களில் புதைந்திருக்கும் கருத்துக்களை கண்டுகொண்ட சம்ஸ்கிருத மொழியாளர்கள்  ஏராளமான தமிழ் சொற்களை இரவல் பெற்று தற்போது அவை எல்லாம் தங்கள் வடமொழி சொற்களே என்று கூறிக்கொள்கிறார்கள்.
எல்லா மொழிகளும் பல மொழிகளில் இருந்து வரும் சொற்களை உள்வாங்குவது ஒரு சாதாரண சரித்திர நிகழ்வுதான்.
அதில் தவிறில்லை.
ஆனால்  சம்ஸ்கிருத மொழியாளர்கள் ஒரு மேலாதிக்க உணர்வோடு தங்களின் சம்ஸ்கிருத மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்த தமிழை சிதைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு பயணிக்கிறார்கள்.
இதன் காரணமாகவே சம்ஸ்கிருத மொழியை மட்டும் நாம் குறிவைத்து நோக்க வேண்டியதாக  உள்ளது.
 

கருத்துகள் இல்லை: