![admk](https://image.nakkheeran.in/cdn/farfuture/yv43zqFv3MCAziOrKRwNpjPl9lgREqQuCP7jWS5Q-w8/1568445876/sites/default/files/inline-images/admk-flags.jpg)
அப்போது,
சென்னை பள்ளிக்கரணை அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ, பைக்கில் வலதுப்புறம் திரும்ப முயன்ற போது, அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் விழுந்ததில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலில் லாரி ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார்கள். பின்னர், அந்த விசாரணையில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் தனது இல்லத்திருமணத்துக்காக, அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த திருமணத்திற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர் அடித்த அச்சகத்துக்கு சீல் வைத்தது மாநகராட்சி அதிகாரிகள். இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்தது. அதில் தமிழக அரசையும், அரசியல் கட்சிகளை குறித்தும் சரமாரி கேள்விளை எழுப்பினார்கள். சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று மதியம் ஆஜராகினர். சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர், பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் சவுரிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்களிடம் பேனர் வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, தமிழகத்தில் விவாகரத்துக்கு மட்டும்தான் பேனர் வைக்கவில்லை என நீதிபதிகள் விமர்சித்தனர். உயிர்பலி கொடுத்தால் தான் அரசு நிர்வாகம் செயல்படுமா? ஏதாவது நல்ல காரியம் நடக்கவேண்டும் என்றால் காவு கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் சிலர் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இனி பேனர்கள் வைக்கமாட்டோம் என உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட பேனர் வைத்தவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் பேனர்களை எடுக்க தொடங்கினார்கள்.
நேற்று முதல் சென்னையில் சட்ட விரோதமாக மற்றும் முறையான அனுமதி பெறாத பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், 15 மண்டல அதிகாரிகளிடமும் பேனர்களை அகற்றும்படி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றினார்கள். பொதுமக்களுக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த கட்சி கொடிகளும் அகற்றப்பட்டன. இன்றும் 2-வது நாளாக பேனர்களை அகற்றும் பணி நடந்தது.
இன்று மதியம் வரை சென்னையில் 2,500-க்கும் மேற்பட்ட பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி உள்ளனர். பேனர்களை அகற்றும் போது அரசியல் கட்சியினர் யாராவது குறுக்கீடு செய்தால் அதுபற்றி போலீசில் தெரிவிக்கும்படி மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக