
தயாரிப்பாளர்கள் எடுக்கின்ற படங்களில் செலவு உள்ளிட்டவைகளின் வெளிப்படைத்தன்மை இருக்கும் பட்சத்தில், நடிகர்களின் சம்பள வரைமுறையும் அதில் இடம் பெற்று, எல்லாமே இறுதி வடிவம் பெற்று எல்லாமே சராசரியாகச் சரி செய்யப்படும் நிலை உருவாகும். இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாக அமையும். தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து பேசி ஒருமித்த கருத்துடன் அடுத்த வாரம் எங்களை வந்து சந்திப்பதாகத் தெரிவித்துள்ளனர். அப்படி சந்திக்கும்போது நல்ல முடிவு எட்டப்படும். அதில், நடிகர்களின் சம்பளம் வரைமுறை உள்ளிட்ட அனைத்தும் இடம்பெறும். தபால் துறையில் தேர்வுகளைத் தமிழிலே எழுத மத்திய அரசிடமிருந்து பெற்று தந்தது அ.தி.மு.க அரசுதான். நீதிமன்ற தீர்ப்பைக்கூட தமிழிலே பெற்றுத்தரலாம் என்ற உத்தரவை பெற்றதும் அ.தி.மு.க அரசுதான்.
நீதிமன்ற தீர்ப்புக்களைத் தமிழ் மொழியில் மாற்றம் செய்யும் பணியும்
வேகமாக நடைபெற்று வருகிறது. தாய் மொழியான தமிழைக் காக்கும் அரசாக அ.தி.மு.க
அரசு இருக்கும். தி.மு.க-வினர் தமிழை அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றனர்.
தமிழுக்காக என்ன செய்தார்கள் என்று அவர்களைத் திரும்ப கேட்டால் தெரியும்.
அவர்களது காலத்தில் தமிழுக்கு ஒன்றும் செய்யாமல். தமிழை வைத்து வெறும்
அரசியல் நடத்திக் கொண்டிருந்தார்கள் தமிழ் வளர்ச்சித் துறையைத் தொடங்கி
ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து, சிகாகோவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில்
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சரை கலந்து கொள்ளச் செய்து முதல்வர் பெருமை
சேர்த்துள்ளார்” என்றார்.<
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக