செவ்வாய், 23 ஜனவரி, 2018

சுபவீ - பாண்டே நேர்காணல் : அடிவாங்குவதற்கு தமிழிசை ஆனால் அதிகாரத்துக்கு நிர்மலா, குருமுர்த்தி, எச்.ராஜா ...

Ravi Raj :சுபவீ. அவர்களுடன் தந்தி டீவி. பாண்டே ஒரு நேர்காணல் செய்தார்
சாம்பிள்களை மட்டும் படியுங்கள்
 பாண்டே - பாஜக மாநில தலைவர் பார்ப்பனர் இல்லையே?
அய்யா சுப.வீ - தமிழிசையை எதற்கு முன்னிறுத்தி உள்ளீர்கள் என்று எங்களுக்கு தெரியாதா. அடி வாங்குவது எல்லாம் தமிழிசை. ஆனால் பாஜக வை இங்கு இயக்குவது எச்.ராஜா வும் குருமூர்த்தியும் தானே. தேர்தலில் ஜெயித்த பொன்.ராதாவுக்கு என்ன பதவி.. போட்டியிடாத நிர்மலா சீத்தாராமனுக்கு என்ன பதவி ...
பாண்டே - ஙே...! ஙே...!! ஙே...!!!
"இது ஆண்டாள் பிரச்சினையும் இல்லை வைரமுத்து பிரச்சினையும் இல்லை. மதநம்பிக்கை குறித்த பிரச்சனையும் இல்லை. அப்படி எங்களை நம்பவைக்க முயற்சி செய்கிறீர்கள். நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது பார்ப்பனருக்கும், பார்ப்பனரல்லாதாருக்கும் இடையிலான பிரச்சினை."
பாண்டே : உங்களைப் போன்றவர்கள் #இந்து மதத்தை எதிர்ப்பது போல மற்ற மதங்களை ஏன் எதிர்ப்பதில்லை???

சுபவீ : மற்ற மதங்கள் எங்களை காலில் பிறந்த சூத்திரர்கள் என இழிவு படுத்தவில்லையே...
பாண்ட : கடவுளை யாரும் தலையிலோ, தோளிலோ, நெஞ்சிலோ விழுந்து வணங்குவதில்லையே, எல்லோரும் பாதத்தில் விழுந்துதானே வணங்குகிறார்கள், அத்தகைய பெருமைக்குரிய இடத்தில் பிறந்ததாக சொல்லப்படுவது பெருமைதானே...
சுபவீ : அத்தகைய பெருமைக்குரிய இடத்தை ஏன் பார்பனர்களாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விட்டுத்தர வேண்டும், நாங்கள் காலில் பிறந்தவர்கள் என சொல்லி நீங்கள் பெருமைபட்டுக்கொள்ள வேண்டியதுதானே...
பாண்டே

கருத்துகள் இல்லை: