புதன், 24 ஜனவரி, 2018

ராமஜெயம் கொலை வழக்கில்-சி.பி.ஐ. டீம், தீவிரமா இறங்கி, இப்ப சாமி ரவிங்கிற பிரபல ரவுடியை நெருங்கியிருக்கு

நொண்டிக் குதிரைக்குச் சறுக்குனா சாக்குதான். இவ்வளவு நாளா நொண்டி அடிச்ச  கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், இப்ப புதுவேகம் தெரியுதே?”’ ”சி.பி.சி.ஐ.டி. விசாரிச்ச வழக்கில், நம்பிக்கை இல்லைன்னு ராமஜெயம் மனைவி லதா நீதித்துறையிடம் முறையிட்டதன் பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ.யின் கைக்கு வந்தது. சி.பி.ஐ. டீம், தீவிரமா இறங்கி, இப்ப சாமி ரவிங்கிற பிரபல ரவுடியை நெருங்கியிருக்கு. ஏற்கனவே இந்த கொலை வழக்கில்  சாமிரவிக்கு  தொடர்பிருக்கலாம்ன்னு, 2016 செப்டம்பர் இதழிலேயே நம்ம நக்கீரன் அழுத்தமா தெரிவிச்சிருந்தது. அதோடு, இந்த வழக்கை அப்ப அங்க ஏ.சி.யா இருந்த ஜெயச்சந்திரன்தான் விசாரிச்சாருங்கிறதையும்,  சம்பவத்தன்னைக்கு சாமி ரவி, திருப்பதியில் இருந்தார்னு ரவியிடம் வாக்குமூலம் வாங்கிப்பதிவு செஞ்சாருங்கிறதையும் கோடிட்டுக்காட்டியது நம்ம நக்கீரன்.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கேஸ் சம்பந்தமான பின்னணிகளை நம்ம நக்கீரன்தானே வெளிப்படுத்திக்கிட்டிருக்கு.”“”ஆமாங்க தலைவரே… அந்த ஜெயச்சந்திரன், திவாகரனின் சம்பந்தி என்பதையும் சாமி ரவி, ஜெயச்சந்திரனின் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவர் ஜெயச்சந்திரன் தரப்புடன் ரியல் எஸ்டேட் பிஸினஸில் பார்ட்னர் என்பதையும் கூட அழுத்தமாக அப்பவே நக்கீரன் குறிப்பிட்டிருந்தது. மேலும் ராமஜெயம் கடத்தப்பட்டபோது, அவரோடு அவரது உறவினர்கள் சிலரும் ஸ்பாட்டில் இருந்தனர் என்பதையும் நக்கீரன் சொல்லியிருந்தது. நம்ம நக்கீரன் அப்போது சொன்ன முடிவை நோக்கிதான் இப்போது சி.பி.ஐ. நகருது. காவல்துறை அதிகாரி ஜெயச்சந்திரன், சென்னையில் இருக்கும் உளவுத்துறைக்கு திவாகரன் பரிந்துரையில் மாற்றப்பட்டார். ஆனால் இவரைப் பிடிக்காத தினகரன், இவரை கரூருக்குத் தூக்கியடிக்கச் செய்தார். இவர் விசயத்தில்தான் முதன் முதலில் தினகரனும் திவாகரனும் உரசிக்கொண்டனர். இந்த உரசல் பலவகையிலும் வெடித்து, இப்போது திவாகரனுக்கும் அ.தி.மு.க.விற்கும் சம்பந்தம் இல்லைன்னு, தினகரன் பேட்டிகொடுக்கும் அளவிற்கு வந்திருக்கு.”’>நக்கீரன்</

கருத்துகள் இல்லை: