
மாணாக்கர்களுக்கும் இலவச பயண அட்டையை வழங்கிவருகிறது. மேலும், தனியார் கல்லூரிகளிலும் படிக்கும் மாணாக்கர்களுக்கும் பழைய பேருந்து கட்டண அடிப்படையில், 50 சதவிகிதம் மானியம் வழங்கிவருகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் 100 சதவிகித இலவச பயணச் சலுகையின் மூலம் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தச் சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணாக்கர்களுக்கு 2,13,810 பயண அட்டைகளும், அரசுப் பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு 35,921 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு 28,348 பயண அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்தப் பின்பும் தொடர்ந்து வழங்கப்பட்டுவருகிறது. தனியார் கல்லூரிகளில் படிக்கும் 3.21 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவிகிதம் கட்டண சலுகையுடன்கூடிய பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக