ஞாயிறு, 21 ஜனவரி, 2018

கோடியக்கரை:பறவைகள் கணக்கெடுக்கும் பணி!

கோடியக்கரை:பறவைகள் கணக்கெடுக்கும் பணி!மின்னம்பலம் :நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
கோடியக்கரை வனவிலங்கு மற்றும் பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 256 வகையான பறவைகள் வருகின்றன. கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாக பறவைகளுக்குத் தேவையான உணவு கிடைப்பதால் அதிகளவில் பறவைகள் சரணாலயத்திற்கு வரத்தொடங்கியுள்ளன.

சைபீரியாவில் இருந்து வரும் 4 அடி உயரமுள்ள அழகான பூநாரை கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்குத் தனிச்சிறப்பு சேர்க்கிறது. இந்நிலையில் கூழைக்கிடா, வரித்தலை வாத்துகள், இலங்கையிலிருந்து கடற்காகம் உள்ளிட்ட 103 வகை நீர்ப் பறவைகளுடன், 274 வகை பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.
மேலும் 12 வழித்தடங்களில் நடைபெற்ற கணக்கெடுப்பில் வனத்துறையினரின் வழிகாட்டுதலுடன் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வாளர்கள் என 90 பேர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை: