வியாழன், 25 ஜனவரி, 2018

உதயநிதி :என் அரசியல் தொண்டர்களை நோக்கியது!

என் அரசியல் தொண்டர்களை நோக்கியது!மின்னம்பலம் :திமுக சார்பில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி, தன்னுடைய அரசியல் தேர்தலை நோக்கியதல்ல; தொண்டர்களை நோக்கியது என்று குறிப்பிட்டார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி தற்போது சினிமாவில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த நிலையில், ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், தாம் அரசியலுக்கு வருவதற்கு நேரம் வந்துவிட்டதாகவும் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு அரசியலில் இருந்ததாகவும் கூறியிருந்தார். உதயநிதியின் அரசியல் தொடர்பான பேட்டிக்கு திமுக தொண்டர்களிடையே இருவேறு விதமான கருத்துகள் நிலவின.

இந்த நிலையில், சென்னை மேற்கு பகுதி திமுக சார்பில் நேற்று (ஜனவரி 24) பொங்கல் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், “தற்போது அனைவரும் ஓய்வுபெறும் வயதில் அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், உதயநிதி கருவிலேயே அரசியலுக்கு வந்தவர். நெருக்கடி நேரத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, உதயநிதி கருவில் இருந்தார். அப்போது சிறைக்கு சென்று ஸ்டாலினுக்கு துர்கா ஆறுதல் தெரிவித்தார். உதயநிதி அரசியலுக்கு வருவதற்கு நிச்சயம் ஸ்டாலின் தடையாக இருக்க மாட்டார். ஸ்டாலினுக்குப் பின்னணியாக உதயநிதி இருக்க வேண்டும். இது காலத்தின் அவசியம்” என்று பேசினார்.
“நடிகனாக இங்கு வரவில்லை. திமுகவின் தொண்டனாக வந்திருக்கிறேன்” என்று கூறி தனது பேச்சை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், “முடிவு எடுத்துவிட்டுத்தான் மேடை ஏறி இருக்கிறேன். என்னுடைய அரசியல் தேர்தலை நோக்கியது அல்ல; திமுக தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறேன்” என்று பேசினார்.
மேலும், “எத்தனையோ நிதியைப் பார்த்துவிட்டதாக கூறும் அமைச்சர் ஜெயக்குமார், அரசுக்கு உள்ள ரூ.7 லட்சம் கோடி பற்றாக்குறையை முதலில் பார்க்கட்டும்” என்று தமிழக அரசை விமர்சித்தார்

கருத்துகள் இல்லை: