சனி, 27 ஜனவரி, 2018

ஸ்டாலின்: களவாணி பசங்களா, “புறம்போக்குகள் மேடையில் நின்னு பேசும் தெம்பை, திராணியை கொடுத்தது இந்த திராவிட மண்

Ganesh Babu :"களவானினா நேரடியா பொன்னாரை சொன்னோம்னு அர்த்தமில்லை. ஜி.எஸ்.டி, உதய் திட்டம், பிரான்சு போர் விமான ஊழல், நீட் தேர்வு, காவிரி நடுவன்மன்றம் அமைக்காததுனு நம்மளை இந்த மத்திய அரசு களவாடலையா? அதைச் சொன்னோம்.
சொந்தமா ஒரு வயலை வாங்கி, அதில உழுது, அதுக்கு நடவு நட்டு, அறுவடைக்கு வந்தாதான் சொந்த நிலத்துல அறுவடப் பண்ண வாரதுனு அர்த்தம். ஆனா ஒன்னுமேயில்லாம அறுவாளை தூக்கிட்டு அறுவடைக்கு வாரதுதான் பொறம்போக்குனு சொல்லுவாங்க. பி.ஜே.பி அப்படித்தான்"
-பி.ஜே.பியை கதறவிட்ட தி.மு.கவின் திரு.அப்பாவு
 கழகங்கள் இல்லாத தமிழகம் என கூறிய பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மொழி போர் தியாகி உருவப்படங்களூக்கு பூத்தூவி மரியாதை செல்லுத்தினார்.
தொடர்ந்து அவர்களது குடும்பங்களுக்கு மரியாதை செலுத்திய பின் மேடையில் பேசும்பொழுது, தமிழகத்தில் தாய்மொழிக்கு அவமரியாதை செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. தமிழை அவமரியாதை செய்தவர்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால் திமுக போராட்டம் நடத்தும் என்று குறிப்பிட்டார்,

மேலும் பேசுகையில், கழகம் இல்லாத தமிழகம் என கூறிய பாஜகவினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது என பேசிய அவர், கே** களவாணி பசங்களா, “புறம்போக்குகள் மேடையில் நின்னு பேசும் தெம்பை, திராணியை கொடுத்தது இந்த திராவிட மண், மறந்துவிடாதே என மிகக்கடுமையாக சாடினார். திமுக செயல் தலைவரின் இத்தைகைய பேச்சு தமிழக அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: