
Shyamsundar - Oneindia Tamil
சென்னை: எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும் என சடகோப ராமானுஜ ஜீயர்
பேசி இருக்கிறார். மேலும் இறைநம்பிக்கைக்கு எதிராக பேசினால் அமைதியாகி
இருக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.
தனியார் பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர்
வைரமுத்து பேசினார். அவர் ஆண்டாளின் பிறப்பு குறித்து தவறுதலாக
பேசிவிட்டதாக சர்ச்சை எழுந்தது.
We know how to throw stones, bottles says Jeeyar
வைரமுத்துவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ
ஜீயர் போராட்டம் அறிவித்து இருந்தார். கடந்த 16 தேதிக்குள் வைரமுத்து
மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அவர் காலக்கெடு விதித்து இருந்தார்.
மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் ஜீயர் 17ம் தேதி தனது உண்ணாவிரத்தை
தொடங்கினார்.சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக ஜீயர் கூறினார். ஆனால்
அதற்கு மறுநாளே அவர் தனது உண்ணா விரதத்தை கைவிட்டார்.
இந்த நிலையில் தற்போது வைரமுத்து குறித்து அவர் பேசி இருக்கிறார். அதில்
''எங்களுக்கும் சோடா பாட்டில் வீச தெரியும். நாங்களும் கல்
எறியக்கூடியவர்கள் தான். ஆனாலும் நாங்கள் அப்படி நடக்க மாட்டோம் '' என்று
குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் ''பிப்ரவரி 3ம் தேதிக்குள் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இறை நம்பிக்கைக்கு
எதிராக யாராவது பேசினால் இனி அமைதியாக போகமாட்டோம்'' என்றும் சடகோப ராமானுஜ
ஜீயர் எச்சரிக்கைவிடுத்து இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக