திங்கள், 22 ஜனவரி, 2018

தலித் சகோதரியின் மரண வாக்குமூலம்..விருதுநகர் ...

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் இனாம்ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வி(27/2018), த/பெ. ஆனந்தராஜ். இவர் கிறிஸ்துவ பறையர் சமூகத்தை சார்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்த எனவர்சாமி(35/2018), த/பெ. பெரிய அய்யனார் என்பவர் கடந்த 23/12/2017 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் நன்கு மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் இரத்த காயத்துடன் செல்வியின் வீட்டிற்கு சென்று செல்வியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட செல்வியின் வீட்டாரும், செல்வியும் எனவர்சாமியை பிடித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல்நிலைய காவலர்கள் கார்த்திக் , பீட்டர் ஆகியோர் எனவர்சாமியை 108ஆம்புலன்ஸில் விருதுநகர் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, செல்வி வீட்டாரிடம் நாளை சூலக்கரை கவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்.
மறுநாள் 24/12/2017 கலை செல்வி மற்றும் செல்வியின் தந்தை ஆனந்தராஜ், சகோதரன் ஜோதிராஜன் ஆகியோர் சூலக்கரை காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கச் சென்றபோது அங்கே இருந்த நிலைய எழுத்தர், பெண் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ராமராஜ் ஆகியோர் ஒழுங்கா இந்த பிரச்சனையை பேசி முடிச்சுக்கோங்க, இல்லைனா எனவர்சாமியை அடிச்சீங்கன்னு சொல்லி உங்கள உள்ள வச்சுருவேணு சொல்லி செல்வி தரப்பினர் கொடுத்த புகார் மனுவை வாங்காமல் செல்வி மற்றும் செல்வியின் குடும்பத்தாரை மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் செல்வி குடும்பத்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் அங்கும் மனு ஏற்புச் சான்றிதழ் (CSR) கூட வழங்கப்படவில்லை. ஆனால் அன்று இரவே செல்வி மற்றும் செல்வி குடும்பத்தைச் சேர்ந்த செல்வியின் தந்தை ஆனந்தராஜ்(54/2018), தாயார் சுகந்தி(46/2017), சகோதரன் ஜோதிராஜன்(33/2017) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை அறிந்த செல்வியின் குடும்பத்தார் முன் ஜாமீன் பெற்றுவிட்டு சூலக்கரை காவல்நிலையத்திற்குச் சென்று எனவர்சாமி மீது புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் கொடுத்த புகார் மனுவினை பெறாமல் , அங்கே இருந்த நிலைய எழுத்தர் நீ சுப்ரிம் கோர்ட்டு கூட போ! ஆனா நீ கொடுத்த பெட்டிசனுக்கு FIR போட முடியாது என்று எகத்தளமாக பதில் குறியுள்ளார். அப்போது அங்கு வந்த பெண் சார்பு ஆய்வாளர் இவங்கள இன்னும் உள்ள தூக்கி வாக்கலையா என்றும், ஆய்வாளர் ராமராஜ் செல்வியின் சகோதரன் ஜோதிராஜனைப் பார்த்து சிக்குன உன்னோட எழும்ப எண்ணிருவேணு சொல்லி மிரட்டியுள்ளனர்.
முன்ஜாமீன் முடிந்து ஜாமீன் பெற்ற செல்வி மற்றும் செல்வியின் குடும்பத்தினர் சூலக்கரை காவல்நிலையம் சென்று தினமும் கையெழுத்து இட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (20/01/2018) மதியம் சுமார் 2:15 மணிக்கு செல்வி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். விருதுநகர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் மெல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
காவல்துறையின் நேர்மையின்மை என்பது மட்டுமல்ல, காவல்துறையின் சாதித்திமிருக்கு சகோதரி செல்வி இறையாக்கப்பட்டிருக்கிறாள்.

இந்த விசயத்தில் சகோதரி செல்வியை பலாத்காரம் செய்ய முயற்சித்த எனவர்சாமி, அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சூலக்கரை காவல்நிலைய எழுத்தர், பெண் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ராமராஜ் ஆகியோர்  தண்டிக்கப்படும் வரை தலித் விடுதலை இயக்கம் சகோதரி செல்வியின் குடும்பத்தாருடன் இணைந்து நிற்கும்.
காவல்துறை தான் என் தற்கொலைக்கு காரணம், எ
ன்னை கற்பழிக்க முயற்சித்த எனவர்சாமி மீது நடவடிக்கை எடுக்கனும், எனவர்சாமிக்கு ஆதரவாக செயல்பட்ட சூலக்கரை காவலநிலைய எழுத்தர், பெண் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் ராமராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கனும்னு உருக்கமாக நமக்கு அளித்த மரண வாக்குமூலம் இதோ!
- சாக்யா செ. பீமராவ்,
மாநில மாணவரணி செயலாளர்,
தலித் விடுதலை இயக்கம்.
பேச : 809828168, 9566665308.

கருத்துகள் இல்லை: