திருமாவுக்கும், வேல்முருகனுக்கும் பயந்து வீட்டோடு முடங்கி கிடக்கின்றார் ரஜினிகாந்த்
திருமாவிற்கு கூட பயமா? மிஸ்டர் ரஜினிகாந்த்.
குஷ்பூ கூட புலிகள் பயங்கரவாதிகள் என சொல்லிவிட்டு எவ்வளவு "தில்லாக சமாளித்தார்.
எத்தனை எதிர்ப்புகள், மிரட்டல்கள் வந்தாலும் எப்படி சமாளித்து நின்றார்?. அந்த தைரியத்தில் 1000ல் ஒரு பங்கு கூட ரஜினிக்கு இல்லை..
இத்தனைக்கும் தேசிய ஆளும் கட்சி, மாநில ஆளும்கட்சி எல்லாம் கொண்டாடும் நபர் ரஜினி, மோடி முதல் ஜெட்லி வரை அவருக்கு காத்திருப்பார்கள்
அப்படி இருந்தும் இப்படி ஒரு பயமா?
நாளை ரஜினி எந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதை திருமாவளவன் தான் முடிவு செய்வார் போல
"அண்ணே ரஜினியினை 4 படம் நடிக்க சொல்லி சொல்லுங்கண்ணே, நீங்க சொன்னாதான் கேட்கிறாம்ணே".. இப்படி இனி தயாரிப்பாளர்கள் திருமா வீட்டு வாசலில் நிற்கலாம்.
இனி யாரெல்லாம் ரஜினியினை மிரட்ட போகின்றார்களோ..
"நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்.." பாடலை நினைத்தால் இப்பொழுது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது.
தைரியம் என்றால் என்ன என்பதை குஷ்பூவிடம் இருந்து ரஜினி கற்றுகொள்வது நல்லது..
இதே லைக்கா நிறுவணம் குஷ்பூவினை விழாவிற்கு அழைத்திருந்தால் மிக தைரியமாக சென்றிருப்பார் அவர்
அதுவும் 4 வார்த்தை "நச்சென்று" சொல்லிவிட்டுத்தான் சென்றுவருவார், அதுதான் குஷ்பூ,
Stanley Rajan முகநூல் பதிவு
Stanley Rajan முகநூல் பதிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக