சனி, 1 ஏப்ரல், 2017

கங்கை அமரனை வரிக்கு வரி ஜாதியை சுட்டி பேசிய ஜாதிவெறி வானதி சீனிவாசன்


சென்னை: தமிழக பாஜக தலைவராக யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் வானதி சீனிவாசன் வரக் கூடாது என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு வானதியின் பேச்சு அமைந்து விட்டது. இவர் மட்டும் தமிழக பாஜக தலைவரானால் ஜாதி ரீதியாக பல பிரச்சினைகளுக்கு இவர் காரணமாக அமைவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது மக்கள் மத்தியில். வார்த்தைக்கு வார்த்தை எஸ்.சி., எஸ்.சி என்று இவர் அழுத்தம் திருத்தமாக கூறிய வார்த்தை மக்களை அதிர வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வானதியின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து கொண்டுள்ளன. சட்டமெல்லாம் படித்தவரான, வானதி சீனிவாசன் இவ்வளவு பேசியும், மிகுந்த முதிர்ச்சியுடன், மிகுந்த நிதானத்துடன், மிகுந்த பொறுப்புணர்வுடன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அளித்த பதிலை பலரும் வாயார பாராட்டி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக புதிய தலைமுறை டிவியில் விவாதம் நடைபெற்றது. டிவி விவாதத்தில் வானதி சீனிவாசன் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடைத் தேர்தலில் போட்டியில்லை என்ற விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாட்டை வானதி சீனிவாசன் விமர்சித்துக் கொண்டிருந்தார்.

அப்போது பாஜக வேட்பாளர் கங்கை அமரனை அவர் பாஜக வேட்பாளர் என்று குறிப்பிடாமல் எஸ்சி வேட்பாளர், எஸ்சி வேட்பாளர் என்று திரும்பத் திரும்பக் கூறினார். கங்கை அமரன் எஸ்சி, கங்கை அமரன் எஸ்சி என்று திரும்பத் திரும்பக் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மக்களுக்கு கங்கை அமரன் என்றால் என்ன ஜாதி என்று தெரியாது. அப்படி அவரை யாருமே பார்க்கவில்லை, பார்த்ததில்லை. கங்கை அமரன் என்றால் பாட்டு பாடுவார், இசையமைப்பார், இசை நிகழ்ச்சிகளை நடத்துவார், நன்றாகப் பேசுவார், கலகலப்பான மனிதர் என்று மட்டுமே தெரியும்.

ஏன் இந்த ஜாதி வெறி ஆனால் கங்கை அமரனை எஸ்சி வேட்பாளர், எஸ்சி வேட்பாளர் என்று கண் முழுக்க கோபத்துடன், படு ஆவேசத்துடன் வானதி கூறிய விதம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அப்படியானால் ஜாதிக்குத்தான் பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறதா அல்லது இப்படிச் சொல்லிக் காட்டுவதற்காகவே கங்கை அமரனை வேட்பாளராக்கியுள்ளதா என்பதை பாஜாக தலைமை விளக்க வேண்டும்.

அதேசமயம், இந்தக் கேள்வியை மிகுந்த நிதானத்துடன் எதிர்கொண்ட திருமாவளவன், நாங்கள் பாஜக வேட்பாளராக மட்டுமே கங்கை அமரனைப் பார்க்கிறோம். அவரை பாராட்டக் கூடச் செய்தோம் என்று அழகாக, பொறுப்புணர்வுடன், நிதானமிழக்காமல் கூறி வானதிக்கு சரியான பதிலடி கொடுத்தார். இப்போது என்ன பிரச்சினை என்றால் தமிழக பாஜக தலைவராக அடுத்து வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என்று ஒரு டாக் ஓடுகிறது. வானதி போன்றவர்கள் தலைவர்களானால் ஜாதிவாதம் எந்த அளவுக்கு மோசமாகுமோ என்ற அச்சமும், கேள்வியும் மக்களிடம் இப்போதே வந்து விட்டது.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: