ஞாயிறு, 26 மார்ச், 2017

19 பேர் வாபஸ் வாங்கினால் மின்னனு வாக்குப்பதிவு: இல்லையேல் வாக்குச்சீட்டு முறை

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 127 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேட்பு மனுக்கள் பரிசீலனையில் 45 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை நாளை வரை வாபஸ் வாங்கலாம். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 82 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் 12 பேர் மாற்று வேட்பாளர்களாக உள்ளனர். இந்த மாற்று வேட்பாளர்கள் நாளை அல்லது நாளை மறுதினம் வாபஸ் வாங்குவார்கள். மேலும் சிலரும் வாபஸ் வாங்கலாம். இறுதியாக 63 வேட்பாளர்களுக்கும் குறைவானவர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, தேர்தலின்போது வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த முடியும்.


இல்லையென்றால் வாக்குச்சீட்டு முறையில்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் நிலை ஏற்படும். ஒரு மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களின் சின்னம் மட்டுமே பொருத்த முடியும். மொத்த வேட்பாளர்களுக்கு அடுத்த வரிசை நோட்டோ (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) என்ற சின்னத்துக்கு வாக்களிக்க இடம் அளிக்கப்படும்.
ஒரு கட்டுப்பாடு எந்திரத்தில் 4 ஓட்டுப்பதிவு எந்திரங்களை இணைக்க முடியும். இப்படி ஒவ்வொரு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் 16 என்ற அடிப்படையில் 4 எந்திரத்தில் மொத்தம் 63 வேட்பாளர் மற்றும் 64வது இடத்தில் நோட்டோ இடம் பெறும். ஆனால் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியில் 82 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாளில் குறைந்தபட்சம் 19 வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினால் மட்டுமே வாக்குப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடத்த முடியும். இல்லையென்றால் ஓட்டுச்சீட்டு முறையிலேயே தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். nakkeeran

கருத்துகள் இல்லை: