வெள்ளி, 31 மார்ச், 2017

நீதிபதி கர்ணன் :நீதிக்கு எதிராக நீதிபதிகள் !

சென்னை உயர்நீதி மன்ற ஊழல்கள் பற்றி பலரும் பேசிவிட்டனர் இவர்தான் தைரியமாக அதனைப்பற்றி பேசுகிறார் வெளிப்படையாக சொல்கிறார் அது பாராட்டுக்குரியது  மேலே வந்துவிட்ட ஒரு தலித்துக்கு எதிராக மற்றவர்கள் எளிதில் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்பது இவருக்குப் புரியவில்லையோ என்னவோ? .அதிலும் வடஇந்தியர்களும் தெற்கு மேற்கு மாவட்டத்தாரும் ஒருநபரின் பெயரை அறிவதற்குமுன் சாதியைத்தான் பார்ப்பார்கள் என்பது கசப்பான உண்மை நேரடியான எதிர்ப்பில் இவர் வெற்றிபெறவே முடியாது. சாமர்த்தியமாக செயல்பட்டு மாட்டிவிடுவது ஒரு கலை அது இவருக்கு வராது . சாதியற்ற பாரதம் என்றுதான் உருவாகுமோ அன்றுதான் நேர்மையான நீதியும் கிடைக்கும்
இருபது நீதிபதிகள் மீது உள்ள குற்றச்சாட்டை உச்ச நீதி மன்றம் ஏன் விசாரிக்கவில்லை. நீதிபதி கர்ணன் மீது மட்டும் ஏன் அவசரம் ?
புதுடில்லி: இயற்கையாக கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் 7 நீதிபதிகள் மீது கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆஜர்: சென்னை ஐகோர்ட் நீதிபதிகளுக்கு எதிராக கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி கர்ணன் பிரதமர் மோடி மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக கடிதம் எழுதியது தொடர்பாக, அவர் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில், கர்ணன் இன்று நேரில் ஆஜரானார். தான் குற்றவாளி அல்ல, தன்னை வழக்கமான பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்ற கர்ணன் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. உத்தரவு: பின்னர் ஏ.என்.ஐ., நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், தனக்கு அதிகாரம் இருந்தால், 7 நீதிபதிகளுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் எனக்கூறியிருந்தார். தொடர்ந்து அவர், இயற்கையாக கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக செயல்படுகின்றனர் எனக்கூறி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்கு எதிராக உத்தரவு பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார். தினமலர்


கருத்துகள் இல்லை: