கழிவறையில் ரத்தக் கறை காணப்பட்டதால்
யாருக்கு மாதவிலக்கு ஏற்பட்டுள்ளது என்ற சோதனை செய்ய 70 மாணவிகளின் ஆடைகளை
கழற்றி வார்டன் அட்டூழியத்தில் ஈட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும்
அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: மாணவிகளை இழிவு செய்யும் வகையில் உறைவிடப்பள்ளியில் தங்கி இருந்த 70
மாணவிகளை வார்டன் உடைகளை அகற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கஸ்தூரிபா காந்தி பெண்கள்
உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் இந்தியாவே அதிர்ச்சி
அடையும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாதவிலக்கின் போது வெளியேறும் ரத்தக் கழிவு கழிவறையின் ஏதோ ஒரு மூலையில்
படிந்திருந்துள்ளது. முறையாக நீர் ஊற்றாமல் அப்படியேவிட்டுவிட்டு வந்த
மாணவி யார் என்பதை கண்டறிய மிக கேவலமான வேலையை அந்தப் பள்ளியின் வார்டன்
செய்துள்ளார்.
உறைவிடப் பள்ளியில் உள்ள 70 மாணவிகளை
ஒன்றாக நிற்க வைத்த வார்டன் அவர்களின் ஆடையை கழற்றுமாறு மிரட்டியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மாணவிகளை பள்ளியில் இருந்து வெளியேற்றி
விடுவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள்
போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவிகளை இழிவுபடுத்திய வார்டனை பணியில்
இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெற்றோர்கள், மாணவிகளின் போராட்டம்
வலுபெற்றுள்ளதையடுத்து, இந்தக் கொடூரத்தைச் செய்த வார்டன் தான் அவ்வாறு
செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அப்படி ஒரு சம்பவமே
நடக்கவில்லை என்றும் அவர் அடித்துக் கூறியுள்ளார்.
மேலும், தான் மாணவிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதால் பலருக்கு தன்னை பிடிக்காது என்று அவர் கூறியுள்ளார்.
அதனால்தான் பழிவாங்கும் எண்ணத்தோடு சிலர் செயல்படுகிறார்கள் என்றும் அந்த கொடூர வார்டன் கூறி எஸ்கேப் ஆகும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கடுமையாக மறுத்துள்ள மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் வார்டனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி வருகின்றனர்.
மாணவிகளை குழந்தைகள் போல் எண்ணி கண்ணியத்துடன் நடத்த வேண்டிய வார்டனே
அவர்களை இழிவு படுத்தியுள்ள சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சி அடையச்
செய்துள்ளது தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக