சனி, 1 ஏப்ரல், 2017

சீனா எச்சரிக்கை : தலாய் லாமாவை அனுமதிப்பதன் மூலம் இந்தியா பெரிய தவறை செய்கிறது!


பெய்ஜிங்: அருணாச்சல பிரதேசத்திற்குள் திபெத் தலைவர் தலாய்லாமாவை அனுமதிப்பதன் மூலம், இந்தியா பெரிய தவறை செய்கிறது என சீனா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லுகாங் கூறியதாவது: தலாய் லாமா அருணாச்சல் செல்வது என்பது இந்தியா, சீனா இடையிலான உறவில் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். அவரது பயணத்திற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். எங்களின் கவலையை இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். சீனா - இந்தியா இடையிலான கிழக்கு பகுதி எல்லையில், எங்களின் நிலை தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது.
தலாய் லாமா நீண்ட காலமாக பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல், தலாய் லாமாவை அருணாச்சல் செல்ல அனுமதிக்கிறது இந்தியா. இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்

கருத்துகள் இல்லை: