சனி, 30 டிசம்பர், 2017

இர்பான் ஹபிப் CP- M : பிரகாஷ் காரத் பாஜகவுக்கு மறைமுக ஆதரவு .... பாஜகவையும் காங்கிரசையும் ஒரே தட்டில்தான் வைக்க வேண்டுமாம்

நக்கீரன் :பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைப்பதை பிரகாஷ் காரத் விரும்பவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரலாற்று அறிஞர் இர்பான் ஹபிப் குறைகூறியிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கூறியிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பாஜகவையும் காங்கிரஸையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். பாஜகவை எதேச்சாதிகார கட்சி என்றோ, மதவாத பாசிசக் கட்சி என்றோதான் கருத வேண்டும். பாசிசிஸ்ட்டுகள் என்று கூறக்கூடாது என்கிறார் பிரகாஷ் காரத். இது தவறான போக்கு என்று இர்பான் ஹபிப் கூறியதாக அந்தப் பத்திரிகை குறிப்பிட்டிருக்கிறது. 3மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் ஜனவரி 19 ஆம் தேதி கொல்கத்தாவில் கூடவிருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் ஒன்றில் இர்பான் ஹபிப் பேசினார். அப்போது பாஜகவையும் ஆர்எஸ்எஸ்சையும் நாஜிகளோடு ஒப்பிட்டார்.


ஹிட்லரின் நாஜிகளைப் போலவே, இங்கே இருக்கிற பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களோடு கைகோர்த்து, தங்களுடைய மதவெறி செயல்திட்டத்தை நிறைவேற்ற திட்டங்களை வடிவமைக்கிறார்கள். இந்தியாவின் ஜனநாயகத்தையும், பன்முகத் தன்மையையும் சிதைக்க முயற்சிக்கிறார்கள்.

ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிகள் யூதர்கள்தான் ஜெர்மனியின் வீழ்ச்சிக்கு காரணம் என்றார்கள். இந்தியாவிலோ, பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் முஸ்லிம்களை குறிவைத்து குற்றம் சுமத்துகிறார்கள். தன்னை யார் எதிர்த்தாலும் அவர்களை அக்பரின் வாரிசுகள் என்று மோடி குற்றம்சுமத்துகிறார். 6ஹிட்லரும் நாஜிகளும் தங்களை ஆரியர்கள் என்று சொல்லிக் கொண்டனர். ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் அப்படித்தான் இங்கேயும் சொல்லிக் கொள்கிறார்கள்.

நாஜிகளுக்கும் ஆர்எஸ்எஸ்சுக்கும் ஒரு வித்தியாசம் சொல்ல வேண்டுமென்றால், நாஜிகள் ஜெர்மனியின் உயர்வுக்காக போராடினார்கள். பாஜகவோ, ஆர்எஸ்எஸ்சோ 1925 ஆம் ஆண்டிலிருந்து, 1947 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் எந்த பங்கும் எடுத்ததில்லை.
இப்படி பாசிசம் வளர்ந்து வரும் நிலையில், மதசார்பற்ற சக்திகளோடு இடதுசாரிகள் இணைந்து போராட தயங்குவது ஏன்? பாசிச போக்கிற்கு எதிராக போராடுவதை, புதிய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிராக போராடுவதை தொடர்பு படுத்தக்கூடாது என்றும் இர்பான் கேட்டுக்கொண்டார். 5அவருடைய இந்தப் பேச்சு, பிரகாஷ் காரத்தின் பார்வைக்கு நேர் எதிரானது ஆகும். பாஜகவோடு காங்கிரஸையும் சேர்த்தே பிரகாஷ் காரத் பேசுவது, பாஜக தன்னை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே உதவும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இர்பானின் பேச்சு கட்சிக்குள் விவாதத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு சிபிஎம் அளித்த ஆதரவை விலக்கிக்கொண்டதன் மூலமாக, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி மம்தாவுடன் கூட்டணி அமைக்க காரணமாக அமைந்தது. அந்தத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் இடதுமுன்னணி ஆட்சியை இழந்தது. அப்போதிருந்து இன்றுவரை மேற்கு வங்கத்தில் இடது முன்னணி எழவே முடியாத அளவுக்கு தோல்வியைத் துழுவி வருகிறது. அதேசமயம், அந்த மாநிலத்தில் பாஜக தனது கணக்கை தொடங்க தீவிரமாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. -ஆதனூர் சோழன்<

கருத்துகள் இல்லை: