செவ்வாய், 26 டிசம்பர், 2017

நடிகர்களின் அரசியல் ஆசைக்கு தடை போட்ட ஆர் கே நகர் .....

தினகரனின் வெற்றிக்கு ஏராளமான 
காரணங்கள் கூறப்பட்டாலும் சில விடயங்கள் மிக தெளிவாக தெரிகிறது.
பாஜக மீது தமிழக மக்கள் கொதித்து போயுள்ளார்கள் . அதன் அளவு மிகவும் உக்கிரம் என்பது முதல் உண்மையாகும் . இதுவரை பாஜக வாங்கிய வாக்குகள் காணமல் போய் படுமோசமான நிலைக்கு அது  தள்ளப்பட்டு விட்டது . 
ரஜினி, கமல், விஜய், விஷால்  ,விஜயகாந்த் போன்ற நடிகர்கள் எல்லாமே பாஜகவின் கைப்புள்ளைகள் ஆகத்தான் மக்களின் கண்களுக்கு தெரிகிறார்கள். மத்திய அரசை சினிமாக்காரர்கள் ஒருபோதும் பகைக்கவே மாட்டர்கள். அவர்களின் ரசிகர்களுக்கு கூட இது தெரியும்,  எனவே இனி பாஜகவோடு தொடர்பு உடைய எவரும்  தமிழகத் அரசியலில்  பிரகாசிக்க முடியாது,  அது ஒரு முடிவுக்கு வந்து விட்டது.

அரசியலில் வெறும் சினிமா கவர்ச்சி என்பது கூட்டத்தை சேர்க்கத்தான் முடியுமே தவிர ஓட்டுக்களை குவிக்க பயன்படாது . அதற்கு நிர்வாக கட்டமைப்பு அரசியல் ரீதியான் தொண்டர் பலம் போன்றவை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த இடைதேர்தல் மிக தெளிவாக காட்டியிருக்கிறது .
எவ்வளவு பலம் வாய்ந்த  கட்டமைப்பு  திமுகவுக்கு இருந்தும், கூட்டணி பலமும் இருந்து  திமுக  டெப்பாசிட் இழந்தது என்பது சற்று  ஆழமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும்
 பாஜகவின் பினாமி அரசாக எடப்பாடி அரசை பார்த்த வாக்களர்களுக்கு  பாஜகவால் பந்தாடப்பட்டு  கொண்டிருக்கும் தினகரன் மீது அனுதாபமும் அவருக்கு ஆதரவும் வழங்குவது பாஜகவுக்கு கொடுக்கும் அடி என்ற எண்ணம் ஏற்பட்டது . இதை பல வாக்காளர்கள் வெளிப்படையாக தெரிவித்தார்கள்.
கூட்டம் சேருவதையும் தாண்டி பல விடயங்கள் இருக்கிறது.
சன்னி லியோனுக்கு கூட கூட்டம் சேரும் ஆனால் ஓட்டுக்கள் சேராது.

எம்ஜியார் திமுகவின் நீட்சி என்பதை வசதியாக மறந்து விட்டு வெறும் பஞ்சு டயலக்கும் டுவீட்டர் வரிகளும் மட்டும்தான் அரசியல் என்று யாரும் நினைத்தால் நிச்சயம் ஏமாறுவார்கள் .
 இவற்றை விட இன்னுமொரு முக்கிய காரணம் பண பலம்,
அதை உரியமுறையில் பயன்படுத்தும் லாவகமும் ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே இருக்க முடியும்,

ஏனெனில் என்னதான் விசுவாசியாக  இருந்தாலும்  பண விடயத்தில் ஒரு ரசிகர்மன்ற அடியாளை விட ஒரு அரசியல் கட்சி தொண்டன் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொள்வான்  என்பது எல்லா அரசியல் கட்சியும் ஏற்று கொள்ளும் விடயம்தான்.
நடிகர்களுக்கும் முன்னால்  வெறும் அப்பாவியாக அசடு வழியும் ரசிகர்கள் பலர் பிளாக் டிக்கெட் வியாபாரத்தை பகுதி நேர வருமானமாக நம்பி காலத்தை ஓட்டுகிறவர்கள் .
இவர்களின் ஆதரவு நடிகர்களுக்கு தேவை. படங்களை ஆஹா ஓஹோ என்று ஓசி விளம்பரம் கொடுத்து டிக்கெட் விற்பனையை உயர்த்த உதவும் சமுக விரோதிகள் இந்த ரசிகர் மன்றங்கள்தான்.
தமிழ் திரைப்பட உலகம் இன்று கந்து வட்டி கும்பலிடம் சிக்கி கிடப்பதற்கும் இந்த ரசிகர் மன்ற  பால் அபிஷேக  கூட்டம்தான் காரணம்,


Gajalakshmi Oneindia Tamil சென்னை : ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பலமிழந்துவிட்டது என்றும் தலைமையில் இல்லாமல் திண்டாடும் தமிழகத்திற்கு தலைமை ஏற்க ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்தன. ஆனால் இந்த கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் டிடிவி. தினகரன். தான் ஒரு தலைவனாக உருவாகி வருவதைத் தான் அவர் தன்னுடைய வெற்றியின் மூலம் தமிழக மக்களுக்கு உணர்த்துகிறாரா?
தமிழகம் தலைமை இல்லாமல் திண்டாடுகிறது நடிகர் ரஜினியும், கமலும் அரசியலுக்கு வரவேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவை வழிநடத்த சரியான தலைமை இல்லை, ஆட்சியை வழிநடத்த அதிகாரம் படைத்த தலைமை இல்லை என்றெல்லாம் குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு ஏற்றாற்போல ஓராண்டில் அதிமுக இரண்டாக மூன்றாக உடைந்து, பின்னர் இணைந்தது. ஆட்சியில் ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை ஆதரித்து மத்திய அரசுடன் இணக்கமாக சென்றது. ஜெயலலிதா எதிர்த்த உதய் மின் திட்டத்தை ஆதரித்தது, நீட் தேர்வுக்கு வலுவான எதிர்ப்பு தெரிவிக்காதது என மத்திய அரசின் திட்டங்களில் மாநில சுயாட்சியை விட்டுக் கொடுத்து சென்றதால் மக்களுக்கு இப்படியொரு எண்ணம் தோன்றியது. இதனிடையே தமிழகத்திற்கு தலைமை ஏற்க ரஜினி, கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பினர். ஒரு வழியாக கமல் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் விரைவில் கட்சி தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினி நாளை முதல் ரசிகர்களை சென்னையில் வைத்து சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நடக்கும் காலத்தில் டிசம்பர் 31 அல்லது ஜனவரி 1ம் தேதி ரஜினி தன்னுடைய அரசியல் வருகை குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.

 தினகரன் ஆர்கே நகரில் பெற்ற வெற்றியானது தமிழகத்தில் திராவிட கட்சிகளின் அரசியல் தான் இனி வரும் காலகட்டங்களிலும் மேலோங்கி இருக்கும் என்பதையே காட்டுகிறது. தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பதைக் காட்டிலும் தான் ஒரு தலைவனாக உருவாகி வருவதைத் தான் தினகரனின் வெற்றி பிரதிபலிப்பதாக பலரும் பார்க்கின்றனர். நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது எம்ஜிஆர் காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் 2009ல் அரசியல் கட்சி தொடங்கிய விஜயகாந்தால் மக்கள் பிரச்னையில் அந்த அளவிற்கு முழு ஈடுபாட்டுடன் செயல்படமுடியவில்லை என்பது தான் உண்மை. நடிப்பு, அரசியல் என்று இரட்டை குதிரையில் சவாரி செய்வது என்பது இரண்டிற்குமே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.</ரன் தலைமையில் புதிய அணி</ எனவே நடிகர் ரஜினி, கமல் தங்களுக்கு இருக்கும் புகழை வைத்து அரசியலுக்கு வந்தாலும், முழுநேர அரசியலில் ஈடுபடுவது இவர்களுக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மற்றொருபுறம் தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகி வரும் நிலையில் இவ

கருத்துகள் இல்லை: