நக்கீரன் :சர்வதேச திரைப்பட விழா கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை
நடத்தப்பட்டது. ஜெர்மன் படங்கள், கொரிய திரைப்படங்கள், இந்தியன் பனோரமா
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள்
திரையிடப்பட்டன. தமிழ் படங்கள் பிரிவில் ஒரு கிடாயின் கருணை மனு, 8
தோட்டாக்கள், அறம், குரங்கு பொம்மை, கடுகு உள்ளிட்ட 12 படங்கள் தேர்வாகி
திரையிடப்பட்டன. அதில் 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் சிறந்த தமிழ்
படத்திற்கான விருதைப் பெற்றது. உலகப் படங்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டை
பின்தொடராமல் நம் மண்ணின் தெய்வங்களை, பழக்கவழக்கங்களை அடிப்படையாக வைத்து
உண்மையான உலகப்படத்தைக் கொடுத்த படத்தின் இயக்குனர் சுரேஷ் சங்கையா
அவர்களிடம் பேசினோம்...>சென்னை திரைப்பட விழா எப்படி நடந்தது? உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...
ரொம்ப புதுசாத்தான் இருந்துச்சு. இப்போ என்றில்லை, நான் படம் பண்றதுக்கு முன்னாடி இருந்தே ஃபெஸ்டிவல்ஸ் அதிகம் போனது இல்ல. படத்தை தயாரிப்பு நிறுவனம் தான் அனுப்புனாங்க . என் படத்துக்கு விருது தரப்போறாங்கனு சொல்றப்ப இந்த ஃபெஸ்டிவல் ரொம்ப ஸ்பெஷலாவே இருந்துச்சு. இன்னும் இதுமாதிரி பல இடங்களில் விழாக்கள் நடக்கணும் என்பதுதான் என் விருப்பம். பொதுவா ஃபெஸ்டிவல் படம்னாலே எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க. ஆனால் இங்கே அப்படி இல்லை. நல்ல படங்களை தேர்வு செஞ்சிருந்தாங்க. அதுவும் ஓரளவு பொழுதுபோக்காக இருப்பது போன்ற படங்களை தேர்வு செய்திருந்தார்கள். அதனால் எனக்கு ரொம்ப சந்தோசமாத்தான் இருந்துச்சு.
ஏற்கனவே சிங்கப்பூர் திரைப்பட விழாவில் உங்க படம் திரையிடப்பட்டது. அதற்கும் சென்னை விழாவிற்கும் வித்தியாசங்கள் இருந்ததா ? ரசிகர்களின் ரசனை, வரவேற்பு எப்படி இருந்தது?
அங்க மொழி தெரியாதவங்க நிறைய பேர் வந்திருந்தாங்க. அவுங்களே படம் பாக்கும்போது பயங்கர ரெஸ்பான்ஸ் கொடுத்தாங்க. என் மனதில் என்ன நினைத்து காட்சிகளை அமைத்திருந்தேனோ, அது குறையாமல், மாறாமல் மொழி தெரியாத ரசிகர்களிடமும் சென்றடைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இங்க இருக்குறவங்களுக்கு மொழி தெரியும். இவர்கள் 'வட்டார வழக்க சரியா காமிச்சுருக்கீங்க, சரியா பயன்படுத்தியிருக்கீங்க என்று சொன்னாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.
ஒரு கிடாயின் கருணை மனு" படத்திற்கு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் என்னவாயிருந்துச்சு?an>ரொம்ப நல்லாவே இருந்துச்சு. நல்ல ரெஸ்பான்ஸ்தான் இருந்துச்சு. அதே நேரம் வருத்தமும் தெரிவிதார்கள். இந்தப் படம் தியேட்டர்ல பார்க்க முடியல, வந்ததே தெரியல அப்படினு சொன்னாங்க. அது கொஞ்சம் வருத்தமாதான் இருந்துச்சு
திரைப்பட விழாவில் மற்ற படங்களை பார்த்தீர்களா?
நான் மற்ற படங்கள் எதையும் பாக்கல. அடுத்த படத்துக்கு ஸ்கிரிப்ட் வேலை போயிட்டு இருந்ததால பாக்க முடியல.<>ஃபெஸ்டிவல் ரசிகர்களின் மனநிலைக்கும், வெகுஜன பட ரசிகர்களின் மனநிலைக்கும் இடைவெளி இருக்கா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக