மாலைமலர் :மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் முன்னர் பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா இன்று ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரனை சென்னையில் சந்தித்து பேசினார்.
ஜெயலலிதா மீது பரபரப்பு புகார் கூறிய அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பா தினகரனுடன் திடீர் சந்திப்பு
சென்னை:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருக்கு பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
நேற்று தினகரன் வீட்டுக்கு சென்ற வேலூர் எம்.பி. செங்குட்டுவன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷால், பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னையில் அடையாறில் இல்லத்தில் தினகரனுடன் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா சந்தித்து பேசினார். நடிகர் மயில்சாமியும் அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து இன்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டபோது முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்றுவரை நீங்கள் முன்னிலை வகித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால், உங்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரும்பினேன். வருங்காலத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்' என சசிகலா புஷ்பா கூறியதாக தெரிவித்தார்.
தன்னைத் தாக்கியதாக ஜெயலலிதா மீதும் சசிகலா மீதும் பரபரப்பு புகார் கூறியிருந்த சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தினகரனை இவர் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக