புதன், 27 டிசம்பர், 2017

காஸ்மீரில் 3 பாகிஸ்தான் வீரரை இந்திய ராணுவம் சுட்டு கொலை ! இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்குள் நுழையவில்லை என்று பாகிஸ்தான் .

தினத்தந்தி :இஸ்லமாபாத்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் அந்நாட்டுப் பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி திங்கள் கிழமை மாலையில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் ஒரு குழுவாக, சியால்கோட் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் இருந்து பாகிஸ்தான் பகுதிக்குள் 300 மீட்டர் தூரத்துக்கு ஊடுருவி, அங்கிருந்த பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில், பாகிஸ்தான் வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார் என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கை பாகிஸ்தான் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் துணைத் தூதரை, அழைத்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக விளக்கமளித்தது. அதில், பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் நுழையவில்லை என்று மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய வீரர்கள் தங்கள் நாட்டின் எல்லையில் இருந்து பாகிஸ்தான் பகுதியை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: