மாலைமலர் :காஞ்சிபுரத்தில் யூனிசெப்
அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பேசிய திரிஷா,
கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும்
அவசியமானது என்றார்.
காஞ்சிபுரம்:
நடிகை
திரிஷா நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால்
அவருக்கு யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக கொரவம் வழங்கப்பட்டுள்ளது.&
இந்த
பதவியில் இருந்தபடி அவர் குழந்தைகள் கல்வி, குழந்தைத் திருமண முறை,
குழந்தைத் தொழிலாளர் முறை, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்
போன்றவற்றை தடுக்கும் முயற்சியில் திரிஷா ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில்,
நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் வடநெமிலியில் யூனிசெப் அமைப்பினரால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த கழிவறை கட்டும் நிகழ்ச்சியில் திரிஷா கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் அந்த கிராமத்தில் கழிவறைகள் கட்டும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய திரிஷா, "கழிவறைகள் பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் காக்க முடியும். அது உயிரை காக்கும். அதுமட்டுமின்றி கழிவறை பயன்படுத்துவது பெண்களின் பாதுகாப்புக்கும், மரியாதைக்கும் அவசியமானது," என்றார்.
இந்தாண்டு யூனிசெப் அமைப்பினால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கழிவறை பயன்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஒரு குடும்பத்தின் மருத்துவ சேலவு மற்றும் நேரத்தில் ஆண்டிற்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக