சனி, 27 மே, 2017

பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரன் எடப்பாடி அணிக்கு தாவுகிறார் ... ஏராளமான கிரிமினல் குற்ற விசாரணைகள் காரணம்?

அணிமாறத் தயாராகும் ஓபிஎஸ் மகன்!
அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலும், சசிகலா தலைமையிலும் செயல்படத் துவங்கியது கடந்த மூன்றுமாதமாக. இரு அணியாகப் பிரிந்து செயல்படத் துவங்கியதால் தக்க நேரம் பார்த்திருந்த பாஜக, தேர்தல் ஆணையம் மூலமாக அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கம் செய்தது. ஆனால், தற்போதைய சூழ்நிலை மாறியதால் ஓ.பி.எஸ். அணியினரில் பெரும்பாலோர் அமைதியானார்கள் கடந்த சில வாரங்களாக.
இந்நிலையில் மணல் குவாரியை எப்படியாவது எடுத்துவிடலாம் என்று கனவில் இருந்துள்ளார் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரன். அப்பா அணியின் பலம் நாளுக்கு நாள் குறைந்து வருவதோடு, டெல்லி செல்வாக்கும் குறைந்து வருவதாலும், எப்படியாவது இ.பி.எஸ். அணியுடன் சேர்ந்துடவேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறாராம். ஓ.பி.எஸ்.-சை நம்பி வந்தவர்கள் நிலையைப் பாருங்கள் என்றால், நமக்குக் கட்சிதான் முக்கியம், கட்சியைக் காப்பாற்ற வேண்டும், ஒத்துவராதவர்களைக் கட்சியை விட்டு நீக்கவேண்டியதுதான் என்று நம்பியவர்களைக் கழட்டிவிட்டு இணையத் துடிக்கிறார் ஓ.பி.எஸ். மகன் என்கிறார்கள் ஓ.பி.எஸ். அதிருப்தியாளர்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: