திருச்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர், மே 25-ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்சப் புகார் அளித்துள்ளார். சூரிய மின் தகடுகள் பதிப்பதற்கு அனுமதி அளிக்க 50 லட்ச ரூபாய் பணத்தை லஞ்சமாக தன்னிடம் வாங்கியதாகவும், பணத்தை வாங்கிவிட்டு அனுமதி அளிக்கவில்லை எனவும் நத்தம் விஸ்வநாதன் மீது லோகநாதன் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும் தன்னுடைய பணம் 50 லட்ச ரூபாயை திரும்ப பெற்றுத்தருமாறு லோகநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கை திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று (மே 25) விசாரித்தது. இந்த புகார் குறித்து நத்தம் விஸ்வநாதன், காமராஜ், அருண்குமார், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த திருச்சி கே.கே.நகர் காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னம்பலம்
வியாழன், 25 மே, 2017
நத்தம் விஸ்வநாதன் மீது மோசடி வழக்கு!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக