
காரணம், தற்போது பிரதமர் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு இருப்பதால் தைரியமாக ஆட்சியிலும், நிர்வாகத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார்கள். முன்புபோல், ஓ.பி.எஸ். அணி இணைய வேண்டும் என்று அதிகமாக அழுத்தம் கொடுப்பதில்லை முதல்வர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு, ஆன்-லைனில் டெண்டர் விடப்பட்டதில், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள் டெண்டர் போட்டிருந்தார்கள்.
நேற்று முன்தினம் (மே 25ஆம் தேதி) கே.பி.முனுசாமி ஆதரவாளர்களின் டெண்டர்களை நீக்கிவிட்டு, சசிகலா அணியினருக்கு 60% வேலையும், திமுக-வினருக்கு 30% வேலையும், கட்சியில்லாத ஒப்பந்தக்காரர்களுக்கு 10% வேலையும் பிரித்துக்கொண்டார்கள். இதனால், ஆத்திரமடைந்த கே.பி.முனுசாமி, ‘எங்கிருந்து இரண்டு அணியினரும் இணையப் போகிறார்கள்? இந்த வேலைகளையெல்லாம் தம்பிதுரைதான் செய்வது’ என்று கூறி டெண்டர் போட்ட தனது ஆதரவாளர்களை நீதிமன்றத்துக்குப் போகச் சொல்லியுள்ளாராம். மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக