
இந்த ரேபிஸ் நோயானது நாய்கள் தவிர வெளவால், நரி, ஓநாய் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளான விலங்குகளாலும் ஏற்படுகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படும் ஒருவர் முறையாக சிகிச்சை எடுக்காதபோது, மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, மூளை பிறழ்வு ஏற்பட்டு மரணம்கூட நிகழும் எனத் தேர்ந்த மருத்துவர்கள் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தின் தென் பகுதிகளான விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தினர் நாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்கினால், உடனடியாக அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது வழக்கம்.
ஆனால், அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் கைவிடப்பட்டு சிகிச்சை பெறமுடியாமல் தவிக்கும் சில நோயாளிகள், மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று குணமாகி திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ரேபிஸ் நோயால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பத்தைத் தாண்டியுள்ளது. இந்த நாய்க்கடியால் மதுரை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பீதி அதிகமாகியுள்ளது. சரியான வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆக, எதையுமே உடனடியாக கண்டு தீர்வளித்தால்தான் நோய் பரவலை ஆரம்பத்திலேயே முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிறது மருத்துவம். அதையறிந்து அரசு அலட்சியப்படுத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
இனியாவது ரேபிஸ் நோய் பரவலைத் தடுக்க முயற்சிகள் எடுக்குமா தமிழக அரசு? மின்னம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக