வெள்ளி, 26 மே, 2017

வைகோ : சிறை என்னை கூர்மை படுத்தியிருக்கிறது ... யாரையாவது குத்திடப்போறாரு?

நடிகர் ரஜினிகாந்த அரசியலுக்கு வருவது பற்றி பேசுவதுதான் தற்போது தமிழ்நாட்டில் ஹாட் டாப்பிக். கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 50 நாள் சிறை வாசத்திற்கு பின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவர் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி விமர்சித்தார். டாஸ்மாக் கடைக்கு எதிராக பெண்களின் எழுச்சி, கருவேல மரங்கள் ஒழிப்பு, கல்வி திட்டத்தில் மாற்றம் என பல்வேறு விஷயங்களை அவர் பேசினார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுகு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அதுபற்றி எந்த கருத்தும் இல்லை என கூறி வைகோ அதிர்ச்சி கொடுத்தார். ரஜினி பற்றி அவர் ஏதேனும் விரிவாக பேசுவார் என எதிர்பார்த்த செய்தியாளர்கள் அவரின் பதிலால் ஏமாற்றம் அடைந்தனர். வெப்துனியா


கருத்துகள் இல்லை: