வெள்ளி, 26 மே, 2017

ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி


வடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. இதை நகடிர் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. கேள்வி : நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே பதில் : இப்ப இருக்கிற சூழ்நிலையில் யாருமே வரக்கூடாது. அது ஏன் நடிகர்கள் என்று ஒதுக்க வேண்டும். அரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை. எம்எல்ஏக்களுக்கு நல்ல சம்பளம் தரலாம். நான் பல ஆண்டுகளாகவே அரசியலில் இருக்கிறேன். ஓட்டு போட ஆரம்பித்தது முதலே நான் அரசியல்வாதிதான். தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்; தற்போதைய அரசியலை பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது. தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான்.நான் இந்தியனாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நக்கீரன்

கருத்துகள் இல்லை: